22 பள்ளி மாணவர்களை ஜேர்மனி அழைத்து சென்றுள்ள தமிழக அரசு
நான் முதல்வன் திட்டத்தின் கீழ், பல்வேறு போட்டிகளில் வெற்றி பெரும் அரசு பள்ளி மாணவ மாணவிகளை, தமிழக அரசு வெளிநாடுகளுக்கு கல்வி சுற்றுலாவிற்காக அழைத்து சென்று வருகிறது.
அதன்படி இதுவரை 300க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பல்வேறு நாடுகளுக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளனர்.
ஜேர்மனி செல்லும் தமிழக மாணவர்கள்
தற்போது மயிலாடுதுறை பகுதியை சேர்ந்த போட்டிகளில் வெற்றி பெற்ற 22 அரசு பள்ளி மாணவர்கள் ஜேர்மனிக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளனர்.
22 மாணவர்கள் மற்றும் 2 ஆசிரியர், அலுவலர்கள் என மொத்தம் 24 நபர்கள், 24.5.2025 அன்று சென்னை விமான நிலையத்தில் இருந்து ஜெர்மனிக்கு புறப்பட்டுள்ளனர்.
மே 28 ஆம் திகதி வரை ஜேர்மனியின் முனிச் நகரில் உள்ள முனிச் பல்கலைகழகம், BMW அருங்காட்சியகம், Deutsche அருங்காட்சியகம், டச்சாவ் வதை முகாம் உள்ளிட்ட இடங்களை பார்வையிடுகின்றனர்.
விமான நிலையத்தில் வைத்து பேசிய மாணவர்கள், "அரசு பள்ளிகளில் படிக்கும் எங்களை அரசு தேர்வு செய்து, முதன்முறையாக விமானத்தில் பறக்க வைப்பது எங்களால் மறக்க முடியாத ஆச்சரியமாக உள்ளது. இதற்காக அரசுக்கும் தமிழ்நாடு முதல்வருக்கும் நன்றி தெரிவித்து கொள்கிறோம்.
நம்முடைய அரசுப்பள்ளி மாணவச் செல்வங்கள் 22 பேருடன் ஜெர்மனி நாட்டிற்கு கல்விச் சுற்றுலா செல்கிறோம்.
— Anbil Mahesh (@Anbil_Mahesh) May 24, 2025
மாநில அளவிலான மன்றப் போட்டிகளில் சிறப்பிடம் பிடித்துள்ள 22 மாணவச் செல்வங்கள் மற்றும் அவர்களுக்கு வழிகாட்டியாக 2 ஆசிரியர்கள் ஆகியோருடன் பயணமாகவுள்ளோம்.
இம்மாணவர்களையும் அவர்களின்… pic.twitter.com/ybIRpfLhap
வெளிநாட்டு கல்வி சுற்றுலா, எங்களின் வாழ்க்கையில் புதிய அனுபவத்தை ஏற்படுத்துவதோடு, வெளிநாட்டு பல்கலைக்கழகங்களில், மாணவ-மாணவிகளுக்கு எவ்வாறு கல்வி கற்றுக் கொடுக்கின்றனர் என்பதை நாங்கள் கற்றுக் கொண்டு, எங்களுடைய கல்வியின் தரத்தையும் உயர்த்திக்கொள்ள முடியும்" என தெரிவித்துள்ளார்.