லண்டனில் 22 வயது இளைஞருக்கு நேர்ந்த சோகம்: சிசிடிவி காட்சிகளை ஆராயும் பொலிஸார்
தென்மேற்கு லண்டன் பகுதியில் ஏற்பட்ட வாகன விபத்தில் 22 வயது இளைஞர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
பிரித்தானியாவில் சாலை விபத்து
சனிக்கிழமை இரவு 11.37 மணியளவில் தென்மேற்கு லண்டனின் கிங்ஸ்டன் பகுதியில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தவர் மீது கார் ஒன்று மோதி விபத்தை ஏற்படுத்தியுள்ளது.
அத்துடன் விபத்தை ஏற்படுத்திவிட்டு பாதிக்கப்பட்டவருக்கு எந்தவொரு உதவியும் செய்யாமல் கார் ஓட்டுநர் அங்கிருந்து தப்பிச் சென்றது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கார் ஓட்டுநர் மீது “ஹிட் அண்ட் ரன்” தொடர்பான குற்ற வழக்கினை பொலிஸார் பதிவு செய்துள்ளனர்.

இந்த சாலை விபத்தில் மோட்டார் சைக்கிளில் சென்ற 22 வயது இளைஞர் பரிதாபமாக உயிரிழந்தார்.
பாதிக்கப்பட்ட சிறுவனுக்கு அவசர சிகிச்சைகள் வழங்கப்பட்ட பின்னரும் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டார்.
விபத்தை நேரில் பார்த்தவர்கள், விபத்து ஏற்படுத்திவிட்டு நிற்காமல் சென்ற கார், கருப்பு அல்லது அடர் நிறத்தில் இருந்ததாக தெரிவித்துள்ளனர்.
தீவிரமடையும் விசாரணை
இந்த சம்பவத்தில் மெட்ரோபொலிட்டன் பொலிஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தீவிரமாக நடத்தி வருகின்றனர்.
இது சம்பந்தமாக இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை என்றும், சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்து வருவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.// அதே சமயம் உயிரிழந்த இளைஞரின் குடும்பத்திற்கு உரிய ஆறுதல் வழங்க சிறப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |