துருக்கி பூகம்பத்தால் தரைமட்டமான 2,200 ஆண்டுகள் வரலாறு கொண்ட கோட்டை! வீடியோ காட்சி
துருக்கியில் ஏற்பட்ட பூகம்பத்தால் 2,200 ஆண்டு வரலாறு கொண்ட Gaziantep கோட்டை தரைமட்டமாகியுள்ளது.
மீண்டும் பூகம்பம்
துருக்கி நாட்டில் இன்று காலை மிகப் பெரிய நிலநடுக்கம் ஏற்பட்டது. துருக்கியில் இந்த நூற்றாண்டில் ஏற்பட்ட மிக மோசமான நிலநடுக்கம் என்றே இதை ஆய்வாளர்கள் பலரும் குறிப்பிடுகின்றனர். இந்த பூகம்பத்தில் இதுவரையில் 1400க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.
இந்தச் சூழலில் துருக்கியின் மத்திய பகுதியை மையமாகக் கொண்டு மீண்டும் இப்போது ஒரு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 7.6 என்ற அளவில் பதிவாகியுள்ளது.
???Tarihi Gaziantep Kalesi deprem nedeniyle yıkıldı.
— Bir Garip Gazeteci (@gazzetecii) February 6, 2023
???Historical Gaziantep Castle was destroyed due to the earthquake. #SONDAKIKA #Turkey #deprem #BREAKING #Gaziantep #Nurdağı #Kahramanmaras #Malatya #Diyarbakır pic.twitter.com/RTZ8LMEgT0
தரைமட்டமான 2,200 ஆண்டு வரலாறு
இதனிடையில் இந்த பூகம்பத்தால் 2,200 ஆண்டு வரலாறு தகர்க்கப்பட்டது. அதன்படி 2,200 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட துருக்கியின் Gaziantep கோட்டை சக்திவாய்ந்த பூகம்பத்தால் தரைமட்டமாகியுள்ளது.
இது தொடர்பான வீடியோ காட்சி வெளியாகியுள்ளது.