தவறாக அச்சிடப்பட்டதால் இரண்டாவது முறையும் அதிர்ஷ்டம்.., லொட்டரியால் பணத்தை குவிக்கும் பெண்
தவறுதலாக அச்சிடப்பட்ட லொட்டரி டிக்கெட்டால் பெண் ஒருவர் இரண்டாவது முறையாக பரிசுகளை குவித்துள்ள சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
பொதுவாக லொட்டரியை பொறுத்தவரை அதிர்ஷ்டம் என்று தான் சொல்கிறார்கள். அதாவது பரிசு விழுந்தவர்களுக்கு ஒரே நாளில் வாழ்க்கை நினைத்து பார்க்க முடியாத அளவுக்கு மாறுகிறது.
அந்தவகையில் அமெரிக்காவில் பல்வேறு மாகாணங்களில் லொட்டரி டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்படுகிறது. அங்கு, பெண் ஒருவருக்கு இரண்டாவது முறையாக அதிர்ஷ்டம் அடித்துள்ளது.
தவறுதலாக அச்சிடப்பட்ட லொட்டரி
மெரிக்காவின் நெப்ராஸ்கா பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் இரண்டு முறையாக தவறுதலாக அச்சிடப்பட்ட லொட்டரி மூலம் அதிர்ஷ்டத்தை பெற்றுள்ளார்.
நெப்ராஸ்கா பகுதியை சேர்ந்த பெண் லோரி செய்லர்ஸ். இவர், பிக் 5 லாட்டரி குலுக்கலின் மூலம் 220,000 டொலர்கள் ஜாக்பாட்டைப் பெற்றுள்ளார்.

இவர் இந்த லொட்டரி டிக்கெட்டை N 48வது தெருவில் உள்ள கேசியின் கடையில் வாங்கியுள்ளார். ஆனால், இந்த லொட்டரி டிக்கெட் தவறாக அச்சிடப்பட்டது. இதன் மூலம் தான் இவருக்கு இரண்டாவது முறையாகவும் அதிர்ஷ்டம் கிடைத்துள்ளது.
இதற்கு முன்னதாக கடந்த கடந்த 2019 -ம் ஆண்டில் மற்றொரு பிக் 5 டிராவிலிருந்து 54,000 டாலர்கள் வரை பரிசு பெற்றார்.
இந்த லொட்டரி டிக்கெட்டும் தவறுதலாக அச்சிடப்பட்டது தான். அதன் மதிப்பு இந்திய மதிப்பில் 5 லட்சத்து 7ஆயிரத்து 814 ரூபாய் ஆகும்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |