அமேசான் காடு அழிப்புக்கு எதிராக போராடிய 2250 சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மர்ம சாவு: பகீர் அறிக்கை
அமேசான் காடுகளை பாதுகாக்க போராடிய இயற்கை ஆர்வலர்கள் ஆயிரக்கணக்கானோர் மர்மமான முறையில் உயிரிழந்து இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அழிக்கப்படும் அமேசான் காடுகள்
தென் அமெரிக்காவின் வடக்கு பகுதியில் சுமார் 70 லட்சம் சதுர கிலோ மீட்டர் பரப்பளவுக்கு அமேசான் காடுகள் பரந்து விரிந்து காணப்படுகிறது.
சொல்லப்போனால் உலகின் பல்வேறு கண்டங்களில் உள்ள காடுகளை ஒன்றிணைத்து பார்த்தால் கூட, அமேசான் மழைக்காடுகள் பரப்பளவு அதிகம் ஆகும்.
இந்நிலையில் பூமியின் நுரையீரல் என்று அழைக்கப்படும் அமேசான் மழைக்காடுகள் தற்போது அதிக அளவில் மனித தலையீட்டின் கீழ் அழிக்கப்பட்டு வருகிறது.
மேலும் காலநிலை உச்சி மாநாடு வரும் நவம்பர் மாதம் அமேசான் காடுகளில் வைத்து நடத்தப்படுவதால் அங்கு சாலைகள் போடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இதற்காக ஆயிரக்கணக்கான மரங்கள் வெட்டப்பட்டு வருவதுடன், வனவிலங்குகளின் பாதுகாப்பும் கேள்விக்குறியாகியுள்ளது.
சமூக ஆர்வலர்களுக்கு ஆபத்து
இந்நிலையில் அமேசான் மழைக்காடுகள் அழிப்புக்கு எதிராக குரல் எழுப்பிய 2250 சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மர்மமான முறையில் உயிரிழந்து இருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
லண்டனை தலைமையிடமாகக் கொண்ட குளோபல் விட்னஸ் என்ற ஆய்வு நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், கடந்த 2012ம் ஆண்டு முதல் 2024ம் ஆண்டு வரை அமேசான் காடு அழிப்புக்கு எதிராக போராடிய சுற்றுச்சூழல் சமூக ஆர்வலர்கள் 2,253 பேர் மர்மமான முறையில் உயிரிழந்து இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2024ம் ஆண்டில் மட்டும் சுமார் 124 பேர் உயிரிழந்து இருப்பதாகவும், ஒவ்வொரு ஆண்டும் இந்த பலி எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இதில் அதிகபட்சமாக பிரேசில் நாட்டில் 365 பேர், கொலம்பியா நாட்டில் 250 பேர், பெருவில் 225 பேர் உயிரிழந்துள்ளனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |