பிரித்தானியாவை பாதுகாப்பு துறையில் வல்லரசாக்க 2.2 பில்லியன் பவுண்டு ஒதுக்கீடு
பிரித்தானியாவை பாதுகாப்பு துறையில் பலமிக்க நாடாக மாற்ற ரேச்சல் ரீவ்ஸ் 2.2 பில்லியன் பவுண்டு ஒதுக்கியுள்ளார்.
பிரித்தானியாவை பாதுகாப்பு தொழில்துறை வல்லரசாக (defence industrial superpower) மாற்றுவதற்காக 2.2 பில்லியன் பவுண்டு நிதி ஒதுக்கப்படும் என நிதியமைச்சர் ரேச்சல் ரீவ்ஸ் அறிவித்துள்ளார்.
உயர் தொழில்நுட்ப நவீன பாதுகாப்பு உபகரணங்களை உருவாக்க இது பயன்படுத்தப்படும்.
தொழில்நுட்ப முதலீடுகளுக்கு முக்கியத்துவம்
பாதுகாப்பு அமைச்சகத்தின் உபகரணத் திட்டப்பணியில் குறைந்தது 10 சதவீதம் நவீன தொழில்நுட்பங்களுக்கு செலவிடப்படும். AI (செயற்கை நுண்ணறிவு), ட்ரோன் போன்ற நவீன தொழில்நுட்பங்களுக்கு அதிக முன்னுரிமை வழங்கப்படும்.
அதன் பகுதியாக 400 மில்லியன் பவுண்டு புதிய தொழில்நுட்பங்களுக்கு ஒதுக்கப்படும். இது காலப்போக்கில் அதிகரிக்கப்படும் என ரீவ்ஸ் தெரிவித்துள்ளார்.
மேலும் 200 மில்லியன் பவுண்டு, Barrow-வில் உள்ள கப்பல் கட்டும் தொழிற்சாலைகளுக்கு வழங்கப்படும், இதனால் ஆயிரக்கணக்கான வேலை வாய்ப்புகள் உருவாகும். Portsmouth கடற்படை தளம் மேம்படுத்தப்படும் என ரீவ்ஸ் கூறியுள்ளார்.
தொழில்துறைக்கு ஆதரவு & விமர்சனங்கள்
கிளாஸ்கோ, டெர்பி, நியூபோர்ட் போன்ற நகரங்களில் பாதுகாப்பு உற்பத்தித் தொழில் வளர்ச்சியடைந்து, உயர் திறன் பெற்ற பொறியாளர்களுக்கு அதிக வேலை வாய்ப்புகள் கிடைக்கும்.
ஆனால், கன்சர்வேட்டிவ் கட்சி பாதுகாப்பு பிரதிநிதி ஜேம்ஸ் கார்ட்லிட்ஜ், 2.2 பில்லியன் பவுண்டு போதாது என்றும் இந்த நாடாளுமன்றத்தின் இறுதிக்குள் 3 சதவீதம் GDP பாதுகாப்புக்கு ஒதுக்க வேண்டும் எனக் கோரியுள்ளார்.
நவீன பாதுகாப்பு திட்டங்கள்
பாதுகாப்பு செயலாளர் ஜான் ஹீலி, 2027-க்குள் நான்கு Royal Navy கப்பல்களுக்கு லேசர் தொழில்நுட்பம் பொருத்தப்படும் என அறிவித்தார். AI அடிப்படையிலான தானியங்கி தாக்குதல் ட்ரோன் திட்டம் நேற்று வெல்லிங்டன் பேரக்கில் (Wellington Barracks) பார்வையிடப்பட்டது.
இத்தொகை அமெரிக்க பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு செலவிடப்படாது என்றும், பிரித்தானியா தனது பாதுகாப்பு திறனை அதிகரிக்கவே இதனை பயன்படுத்தும் என்றும் ஹீலி உறுதி அளித்தார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |