நடுக்கடலில் வெடித்த LPG வாயு நிரம்பிய கப்பல்: 23 இந்திய மாலுமிகளின் நிலை என்ன?
ஏமன் கடலில் எல்பிஜி கப்பல் வெடிப்பு சம்பவத்தை தொடர்ந்து 23 இந்தியர்கள் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர்.
கப்பல் விபத்து
சனிக்கிழமை ஏமன் நாட்டின் கடற்கரை அருகே கெமரூன் நாட்டு கொடியுடன் சென்ற MV Falcon என்ற எல்பிஜி(LPG) கப்பலில் எதிர்பாராத விதமாக தீ விபத்து மற்றும் வெடிப்பு சம்பவம் நடந்துள்ளது.
ஓமானின் சோஹார் துறைமுகத்தில் இருந்து ஜிபூட்டிக்குச் சென்று கொண்டிருந்த போது இந்த விபத்தானது நடைபெற்றுள்ளது.
15% கப்பல் தீப்பிடித்து எரிந்ததை அடுத்து கப்பல் கட்டுப்பாட்டை இழந்து கடலில் மிதக்கத் தொடங்கியுள்ளது.
விபத்துக்கான காரணம் விசாரணையில் இருக்கும் நிலையில், இந்த சம்பவம் தற்செயலாக நடந்து இருக்கலாம் என்று முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
23 இந்தியர்கள் மீட்பு
இந்த சம்பவத்தை தொடர்ந்து 24 மாலுமிகள் கப்பலை விட்டு வெளியேறினர்.இவர்களில் 23 பேர் இந்தியர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் தற்போது இந்த 23 இந்திய மாலுமிகளும் பத்திரமாக மீட்கப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது,
கப்பலில் திரவ பெட்ரோலிய வாயு நிரம்பி இருப்பதால் எப்போது வேண்டும் என்றாலும் மிகப்பெரிய வெடிப்பு ஏற்படலாம் எனவே சம்பந்தப்பட்ட கப்பலில் இருந்து விலகி இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |