ஒரே குத்தில் பறிபோன உயிர்! சரிந்து விழுந்த 23 வயது வீரரின் வீடியோ
இந்திய மாநிலம் கர்நாடகாவில் இளம் குத்துச்சண்டை வீரர், போட்டியின் போது பலத்த காயமடைந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.
கடந்த 10ஆம் திகதி பெங்களுருவில் நடந்த குத்துச்சண்டை போட்டியில், மைசூரைச் சேர்ந்த 23 வயது குத்துச்சண்டை வீரர் நிகில் பங்குபெற்றார்.
எதிர்த்து சண்டையிட்ட வீரர் நிகில் முகத்தில் பலமாக தாக்கியதில், குத்துச்சண்டை வளையத்திற்குள் சரிந்து விழுந்தார். சுயநினைவை இழந்திருந்த அவர் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் அவர் கோமா நிலைக்கு சென்றுவிட்டார்.
பின்னர் இரண்டு நாட்கள் கழித்து சிகிச்சை பலனின்றி நிகில் பரிதாபமாக உயிழந்தார். தனது மகனின் அகால மரணத்தினால் தந்தை சுரேஷ், தாய் விமலா அதிர்ச்சியில் உறைந்தனர்.
#Karnataka #Bengaluru
— Kiran Parashar (@KiranParashar21) July 14, 2022
Police have registered a negligence case against organisers after boxer Nithin died after he received a blow from opponent in state level kickboxing championship. @IndianExpress pic.twitter.com/PgiwkPK4Tp
பின்னர் தாய் விமலா கூறும்போது, கடந்த 10ஆம் திகதி எனக்கு வந்த செல்போன் அழைப்பில் பேசிய நபர், என் மகனுக்கு விளையாடும்போது பலத்த காயங்கள் ஏற்பட்டதாக தெரிவித்தார் என கூறியுள்ளார்.
indianexpress
மேலும் தந்தை சுரேஷ் கூறுகையில், 'குத்துச்சண்டை அரங்கில் உள்ள தரையில் உள்ள விரிப்பு மிகவும் மெல்லியதாக இருந்தது. முகத்தில் அடிபட்டு கீழே விழுபவருக்கு தரையில்பட்டு கூடுதல் காயங்கள் ஏற்படும். போட்டி ஏற்பாட்டாளர்கள் முதலுதவியை வழங்கவில்லை. மேலும் குத்துச்சண்டை போட்டி நடக்கும் இடத்தில் மருத்துவக் குழுவினரும் இல்லை, ஆக்சிஜன் மற்றும் ஸ்ட்ரெட்சர் வசதிகள் இல்லை' என குற்றம் சாட்டியுள்ளார்.
அதனைத் தொடர்ந்து போட்டி ஏற்பாட்டாளர்களின் அலட்சியத்தால் தான் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
indianexpress