7 மாதங்களில் 25 ஆண்களை திருமணம் செய்த 23 வயதான பெண் - சிக்கியது எப்படி?
பணம் மற்றும் நகைக்காக பெண்கள் சிலர், ஒன்றுக்கு மேற்பட்ட ஆண்களை திருமணம் செய்து மோசடி செய்யும் சம்பவம் அவ்வப்போது நிகழ்ந்து வருகிறது.
கடந்த ஆண்டு ஈரோட்டை சேர்ந்த பெண், 50க்கும் மேற்பட்ட ஆண்களை திருமணம் செய்து ஏமாற்றிய சம்பவம் நடைபெற்றது.
7 மாதங்களில் 25 திருமணம்
இதே போல் உத்திரப்பிரதேசத்தை சேர்ந்த 23 வயதான பெண், 7 மாதங்களில் 25 பேரை திருமணம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரபிரதேச மாநிலம் மஹராஜ்கன்ஜ் பகுதியில் உள்ள மருத்துவமனையில் பணியாற்றி வந்த அனுராதா, குடும்ப பிரச்சனை காரணமாக கணவரிடம் இருந்து பிரிந்து போபாலில் வசித்து வந்துள்ளார்.
அங்கு, திருமண ஏஜெண்டுகளுடன் சேர்ந்து திருமண மோசடிகளில் ஈடுபடும் நபர்களுடன் அனுராதாவிற்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது.
இந்த மோசடி கும்பல் வாட்ஸ் ஆப் மூலம் மணப்பெண்களைக் காட்டி, அவர்களின் சேவைகளுக்காக ரூ.2 லட்சம் முதல் ரூ.5 லட்சம் வரை பணம் வாங்குகிறார்கள்.
திருமணம் முடிந்த ஒரு வாரத்திற்குள் வீட்டில் உள்ள தங்கம், பணம் உள்ளிட்டவற்றை எடுத்துக்கொண்டு தப்பித்து செல்வதை வழக்கமாக கொண்டுள்ளனர்.
அனுராதாவும் இதே போல், 25 பேரை திருமண மோசடியில் ஈடுபட்டுள்ளார். ராஜஸ்தானை சேர்ந்த விஷ்ணு சர்மா எனும் நபர், கடந்த மே 3 ஆம் திகதி காவல்துறையில் அளித்த புகாரின் மூலம் இந்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
அவர் அளித்த புகாரில், வரன் பார்த்து தரும்படி திருமண ஏஜெண்ட்களான சுனிதா மற்றும் பப்பு மீனா ஆகியோரிடம் ரூ.2 லட்சம் பணம் கொடுத்தேன். அவர்கள் அனுராதாவை மணமகளாக அறிமுகம் செய்தனர்.
ஏப்ரல் 20 ஆம் திகதி உள்ளூர் நீதிமன்றத்தில் பதிவு திருமணம் செய்துகொண்டோம். மே 2 ஆம் திகதி வீட்டில் இருந்த விலையுயர்ந்த பொருட்களுடன் தப்பி சென்று விட்டார்" என தெரிவித்துள்ளார்.
சிக்கியது எப்படி?
விஷ்ணு சர்மாவையடுத்து, போபாலை சேர்ந்த கப்பர் என்பவரை திருமணம் செய்து, அவரிடமிருந்து ரூ.2 லட்சம் வசூலித்துள்ளார்.
இதனையடுத்து, காவலர் ஒருவர் மணமகன் போல் வரன் தேடுவதாக பேசி, அனுராதா மற்றும் மோசடி செய்த திருமண ஏஜெண்ட்களை கைது செய்துள்ளனர்.
அவரிடம் நடத்திய விசாரணையில் ராஜஸ்தான், உத்தரபிரதேசம் மற்றும் மத்திய பிரதேசம் ஆகிய பல்வேறு மாநிலங்களில் மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |