கட்டுப்பாட்டை இழந்த லொறி... 23 வாகனங்களில் மோதி கோர விபத்து: ஐக்கிய அமீரகத்தில் சம்பவம்
Fourteen dead after truck loses control: லொறி கட்டுப்பாட்டை இழந்ததில் பதினான்கு பேர் மரணமடைந்தனர்.
ஐக்கிய அரபு அமீரகத்தின் ஃபுஜைரா நகரில், லொறி சாரதி கட்டுப்பாட்டை இழந்து பல வாகனங்கள் மீது மோதியதில் பதினான்கு பேர் மரணமடைந்ததாகவும், டசின் கணக்கானோர் காயமடைந்ததாகவும் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
பலத்த உயிர் சேதம்
ஐந்து லொறிகள் உட்பட 23 வாகனங்கள் சம்பந்தப்பட்ட இந்த விபத்து, நள்ளிரவுக்குச் சற்று முன்பு கிழக்கு அமீரகத்தின் நுழைவாயிலில், போக்குவரத்து மெதுவாகச் சென்றுகொண்டிருந்த வேளையில் நிகழ்ந்தது என்று உள்விவகார அமைச்சகம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

மோதலின் காரணமாக லொறி தீப்பிடித்ததாகவும், அந்தத் தீ மேலும் பல வாகனங்களுக்குப் பரவியதால், பலத்த உயிர் சேதம் ஏற்பட்டதாகவும் அமைச்சகம் தெரிவித்தது.
முப்பது பேர் காயமடைந்து மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டதாகவும், மரணமடைந்தவர்களின் உடல்களை அடையாளம் காண டிஎன்ஏ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் ஃபுஜைரா காவல்துறை தெரிவித்துள்ளது.
அவர்களில் சிலர் ஐக்கிய அரபு அமீரக நாட்டவர்கள் என்று காவல்துறை மேலும் தெரிவித்தது. ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள இந்தியத் தூதரகம், மரணமடைந்தவர்களில் இந்தியக் குடிமக்களும் அடங்குவதாகத் தெரிவித்ததோடு,
மரணமடைந்தவர்களின் குடும்பத்தினரைத் தொடர்புகொண்டுள்ளதாகவும், அவர்களுக்கு உதவியும் ஆதரவும் வழங்குவதற்காக உள்ளூர் அதிகாரிகளுடன் இணைந்து செயல்பட்டு வருவதாகவும் கூறியுள்ளது.

வெளியாகியுள்ள தகவலின் அடிப்படையில், கேரளாவைச் சேர்ந்த மூவர் இந்த விபத்தில் சிக்கி பலியாகியுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. சாலையில் போக்குவரத்து மெதுவாக நகர்ந்ததால் நிறுத்தப்பட்டிருந்த மற்ற வாகனங்கள் மீது கவிழ்ந்து மோதியதற்கு முன்பு, அந்த லொறி மற்றொரு வாகனத்தின் மீது மோதியதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்தியா, பிரேசில், பாகிஸ்தான்
காவல்துறை, மருத்துவ உதவியாளர்கள் மற்றும் குடிமைப் பாதுகாப்பு குழுக்கள் உள்ளிட்ட அவசரகால சேவைகள், தீயை அணைக்கவும், காயமடைந்தவர்களை மருத்துவமனைகளுக்கு மாற்றவும், மேலும் சிறப்பு நிபுணர் குழுக்கள் தொடர்ந்து செயல்படும் அந்த இடத்தை பாதுகாக்கவும் சம்பவ இடத்திற்கு விரைந்தன.

உள்விவகார அமைச்சகமும் காவல்துறையும் மரணமடைந்தவர்களின் குடும்பத்தினருக்குத் தங்களது ஆழ்ந்த இரங்கலையும் மனமார்ந்த அனுதாபத்தையும் தெரிவித்ததோடு, காயமடைந்தவர்கள் விரைவில் குணமடையவும் வாழ்த்தின.
காயமடைந்தவர்களில் பாதியினர் சிகிச்சை பெற்ற பிறகு மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பினர்; மீதமுள்ளவர்கள் தொடர்ந்து மருத்துவக் கண்காணிப்பில் உள்ளனர்.
அவர்கள் ஐக்கிய அரபு அமீரகம், ஓமன், இந்தியா, பிரேசில், பாகிஸ்தான், ஜோர்டான் மற்றும் எகிப்து ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்கள் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.