23 ஆண்டுகளுக்கு முன்பு உள்ள ரத்தன் டாடா.., வீடியோ வெளியிட்ட இன்போசிஸ் நிறுவனம்
மறைந்த தொழிலதிபர் ரத்தன் டாடாவின் 23 ஆண்டுகளுக்கு முன்பு உள்ள வீடியோவை இன்போசிஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது.
டாடாவின் வீடியோ
டாடா குழுமத்தின் முன்னாள் தலைவரும், பிரபல தொழிலதிபருமான ரத்தன் டாடா கடந்த ஒக்டோபர் 9 -ம் திகதி உடல்நலக்குறைவால் காலமானார். அவரது மறைவிற்கு பிரபல தொழிலதிபர்களும், அரசியல் தலைவர்களும் இரங்கல்களை தெரிவித்தனர்.
இதையடுத்து, அவருக்கு பாரத ரத்னா விருது அளிக்க வேண்டும் என பரிந்துரைக்க மகாராஷ்டிரா மாநில அமைச்சரவை முடிவு செய்துள்ளது.
இந்நிலையில், ரத்தன் டாடாவுடனான நினைவை இன்போசிஸ் நிறுவனம் ட்விட்டர் எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளது. அந்த வீடியோவில் ரத்தன் டாடா சிறிய மரக்கன்று ஒன்றினை நாடுகிறார். அந்த மரமானது தற்போது பெரிய மரமாக வளர்ந்துள்ளது.
கடந்த 2001 -ம் ஆண்டில் பெங்களூர் எலக்ட்ரானிக்ஸ் சிட்டியில் உள்ள இன்போசிஸ் நிறுவன அலுவலகத்திற்கு ரத்தன் டாடா வந்துள்ளார்.
அப்போது அங்கிருந்த அதிகாரிகள் ரத்தன் டாடாவிற்கு அலுவலகத்தை சுற்றி காட்டியுள்ளனர். அவர் தனது நினைவாக Tabebuia Rosea மரக்கன்றினை வளாகத்தில் நட்டுள்ளார். அந்த மரமானது தற்போது பெரிதாக வளர்ந்துள்ளது.
When Ratan N Tata visited Infosys Bangalore 23 years ago, he planted a Tabebuia Rosea. The plant has grown into a tree today, and so has our shared purpose and vision. His legacy continues to inspire us to pursue growth and innovation, moving the world forward together. pic.twitter.com/bDOLByu0ry
— Infosys (@Infosys) October 17, 2024
இந்த வீடியோவை பகிர்ந்த இன்போசிஸ், "செடி மட்டுமல்ல நம்முடைய நோக்கமும் தொலை நோக்கு பார்வையும் கூட வளர்ந்திருக்கிறது" என்று கூறியுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |