2 வருடத்தில் நிறுவனத்தை உருவாக்கி ரூ.40,000 கோடிக்கு விற்ற 23 வயது இந்திய வம்சாவளி
23 year old yash patil sold his startup for 40,000 crores: 23 வயதான இந்திய வம்சாவளியான யாஷ் பாட்டீல், 2 ஆண்டுகளில் அப்ளைடு கம்ப்யூட் என்ற ஸ்டார்ட்அப் நிறுவனத்தை உருவாக்கி, அதை சுமார் ரூ.40,000 கோடிக்கு விற்பனை செய்துள்ளார்.
யாஷ் பாட்டீல்
அமெரிக்காவில் குடியேறிய இந்திய பெற்றோரின் மகனான 23 வயதான யாஷ் பாட்டீல் (Yash Patil), ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகத்தின் கணினி அறிவியல் பட்டதாரி ஆவார்.

2023 ஆம் ஆண்டு முதல் Open AI நிறுவனத்தில் தொழில்நுட்பப் பணியாளராக பணியில் சேர்ந்த அவர், மே 2025 ஆம் ஆண்டில் அங்கிருந்து வெளியேறினார்.
Open AI ல் தன்னுடன் பணியாற்றிய சக ஸ்டான்போர்ட் முன்னாள் மாணவர்களான ரிதம் கார்க் மற்றும் லிண்டன் லீ ஆகியோருடன் இணைந்து, அப்ளைடு கம்ப்யூட் (Applied Compute) என்ற ஸ்டார்ட்அப் நிறுவனத்தை உருவாக்கினார்.

இந்த ஸ்டார்ட்அப் நிறுவனமானது, வெளிப்புற AI சேவைகளை முழுமையாகச் சார்ந்திருப்பதற்குப் பதிலாக, நிறுவனங்கள் தங்களின் சொந்த AI மாதிரிகளை உருவாக்கி இயக்க வேண்டும் என்பதை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டது.
இதன் தொழில்நுட்பம், நிறுவனங்கள் தங்களின் சொந்தத் தரவுகளைப் பயன்படுத்தி தனிப்பயன் மாதிரிகளுக்குப் பயிற்சி அளிக்கவும், அவற்றை அன்றாட வணிகச் செயல்பாடுகளுக்கு இயக்கவும் அனுமதிக்கிறது.
தற்போது, இந்த 18 மாத கால நிறுவனத்தை பாலோ ஆல்டோ நெட்வொர்க்ஸ் (Palo Alto Networks) நிறுவனத்தால் 4.5 பில்லியன் டொலர் (இந்திய மதிப்பில் சுமார் ரூ. 40,000 கோடி) மதிப்பிலான முழுப் பங்குப் பரிவர்த்தனை மூலம் கையகப்படுத்தப்பட உள்ளது.
Applied Compute has signed a definitive agreement to be acquired by Palo Alto Networks for $4.5B! Rhythm, Linden, and I founded Applied Compute with a belief that was unusual at the time: that every company should own its intelligence. We think training, serving, and improving proprietary models will become a normal part of running a company. To do useful work, a model needs to access sensitive data and systems, comply with policies, and remain explainable, verifiable, and auditable. This is the reason we've always prioritized security, and why joining Palo Alto Networks will help us go further faster. Customers will still own and control their models, and I'm excited for all the ways our combined capabilities can serve them even better. Above all, I'm incredibly grateful for the AC team. A few dozen people in just over 18 months grew this company from zero revenue to over $100M in annualized revenue run-rate, working with many of the world's most innovative companies. More to come soon.
— Yash Patil (@ypatil125) November 18, 2026
இந்த பரிவர்த்தனை முடிந்தவுடன், யாஷ் பாட்டீல் பாலோ ஆல்டோ நெட்வொர்க்ஸ் நிறுவனத்தில் இணைத் தலைமை AI அதிகாரியாக இணைவார்.
இந்த ஒப்பந்தம் அடுத்த ஆண்டு நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அப்ளைடு கம்ப்யூட் நிறுவனம் வெறும் 18 மாதங்களில் பூஜ்ஜியத்திலிருந்து தொடங்கி, ஆண்டு வருவாய் விகிதத்தில் 100 மில்லியன் டாலர்களைத் தாண்டிவிட்டதாக பாட்டீல் தெரிவித்தார்.
மேலும், முதலீட்டாளர் எலாட் கில் தலைமையிலான நிதி திரட்டும் சுற்றில், இந்நிறுவனம் 3.25 பில்லியன் டொலர் மதிப்பீட்டில் 350 மில்லியன் டொலர்களைத் திரட்டியுள்ளது. அதன் வாடிக்கையாளர் பட்டியலில் மைக்ரோசாப்ட், ஷாப்பிஃபை உள்ளிட்ட தொழில்நுட்ப நிறுவனங்கள் உள்ளன.
மேலும், அந்நிறுவனத்தின் இன்ஃபரன்ஸ்-சர்விங் வணிகம் தொடங்கப்பட்ட 12 வாரங்களுக்குள், தினமும் ஒரு டிரில்லியன் டோக்கன்களைச் செயலாக்கி வருவதாகவும் பாட்டீல் கூறினார்.