24 வருடங்களாக எஞ்சின் ஆயிலை குடித்து உயிர்வாழும் அதிசய நபர்
24 ஆண்டுகளாக பழைய வாகனத்தின் எஞ்சின் ஆயிலை குடித்து உயிர் வாழ்ந்து வரும் நபரின் வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.
எஞ்சின் ஆயிலை குடிக்கும் நபர்
இந்திய மாநிலமான கர்நாடகா, சித்ரதுர்கா பகுதியைச் சேர்ந்த குமார்(40). இவர், கடந்த 24 ஆண்டுகளாக பழைய வாகனத்தின் எஞ்சின் ஆயிலை குடித்து உயிர் வாழ்ந்து வருவதாக கூறியுள்ளார்.
இவர் சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு மாலை அணிந்து இருமுடி கட்டிச் செல்லும் போது கையில் பிளாஸ்டிக் பாட்டில் ஒன்றை வைத்துள்ளார். அதில் இருக்கும் பழைய வாகன எஞ்சின் ஆயிலை குடித்துள்ளார்.
இவர் எஞ்சின் ஆயிலை குடிக்கும் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இவர் கட்டட தொழில் செய்து வந்துள்ளார்.
அப்போது அதற்கான கூலி கொடுக்காத காரணத்தால் இதனை குடிப்பதாகவும் கூறியுள்ளார். மேலும், பசிக்காக எஞ்சின் ஆயில் குடித்து பழக்கிக் கொண்டதால் நாளடைவில் நாள் ஒன்றுக்கு 5 லிட்டர் கொடுத்து வருவதாகவும் குமார் தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |