கல்விக்கட்டணம் செலுத்தாத 100 -க்கும் மேற்பட்ட மாணவர்களை வெயிலில் அமரவைத்த அவலம்
கல்விக்கட்டணம் செலுத்தாத 100 -க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளை பள்ளிக்குள் அனுமதிக்காமல் வெயிலில் அமரவைத்த சம்பவம் அரங்கேறியுள்ளது.
மாணவிகளின் நிலை
இந்திய மாநிலமான உத்தர பிரதேசம் சித்தார்த் நகரில் தனியார் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் பயிலும் 100 -க்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்விக்கட்டணம் செலுத்தாததால் பள்ளிக்குள் அவர்களை அனுமதிக்கவில்லை.
விரதம் முடித்துவிட்டு திருப்பதிக்கு பாதயாத்திரை சென்ற பவன் கல்யாண்.., படியேற முடியாமல் மூச்சு திணறல்
அதற்கு மாறாக வெளியில் வெயிலில் அமரவைத்த சம்பவம் அரங்கேறியுள்ளது. அதாவது, சாலை மற்றும் வயல்களுக்கு அருகில் அசுத்தமான இடத்தில் அமர வைக்கப்பட்டதால் பள்ளி மாணவ மாணவிகள் கண்ணீருடன் இருந்தனர்.
இதனை வீடியோவாகவும் எடுத்து மாணவர்களின் பெற்றோருக்கு அனுப்பி மிரட்டவும் செய்துள்ளனர்.
இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியானதால் பெரும் சர்ச்சையாக மாறியது. இதையடுத்து, இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
#सिद्धार्थनगर
— बेसिक शिक्षा: सूचना और सामग्री (@Info_4Education) October 1, 2024
शर्मनाक घटना?
विद्यालय की मान्यता समाप्त होना चाहिए
?स्कूल प्रबंधक की तानाशाही का वीडियो वायरल, फीस जमा नहीं होने पर बच्चों को अपमानित किया,
?सैकड़ों बच्चों को रोड पर बैठाकर वीडियो बनाया, श्यामराजी हाईस्कूल के प्रबंधक ने वीडियो वायरल किया,#Siddharthnagar… pic.twitter.com/PcvAeaefT1
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |