ஒரு நிமிடத்திற்கு 25,000 ரயில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யலாம்: இந்திய அமைச்சர்
இனி நிமிடத்திற்கு 25,000 டிக்கெட்டுகளை பயணிகள் முன்பதிவு செய்யலாம் என்று ரயில்வே அமைச்சர் தெரிவித்துள்ளார்.
25,000 டிக்கெட்டுகள்
இந்திய ரயில்வேயானது பயணிகள் முன்பதிவு முறையை முழுமையாக மேம்படுத்தியுள்ளது. இதன் மூலம் நிமிடத்திற்கு 25,000 டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய முடியும் என்று தெரிவித்துள்ளார் ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ்.
மக்களவையில் பயணிகள் முன்பதிவு முறையை (PRS) மேம்படுத்த எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த கேள்விக்கு எழுத்துப்பூர்வமாக பதிலளித்தார் வைஷ்ணவ்.
அவர், "தற்போதைய PRS இன் முன்பதிவு திறன் நிமிடத்திற்கு சுமார் 25,000 டிக்கெட்டுகள் ஆகும்" என்றார்.
இதில், வன்பொருள், மென்பொருள், நெட்வொர்க் உபகரணங்கள், பாதுகாப்பு உள்கட்டமைப்பு மற்றும் புதிய அம்சங்களைக் கையாளும் திறன் கொண்ட வடிவமைப்புகளுடன் புதிய தொழில்நுட்பத்தில் செயல்பாடுகளை மேம்படுத்துதல் மற்றும் மாற்றுதல் ஆகியவை அடங்கும்.
மேலும், மேம்படுத்தல் பணி ரூ.82 கோடி செலவில் அனுமதிக்கப்பட்டுள்ளது என்றும் கூறினார் வைஷ்ணவ்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |