நடிகைகளை குறிவைத்து உற்சாக பான மோசடி - ஏமாற்றப்பட்ட 25 பிரபலங்கள்
25 ஹிந்தி சீரியல் நடிகர், நடிகைகள் உற்சாக பான விளம்பரத்தில் நடிக்க வைத்து, மோசடி செய்யப்பட்டுள்ளனர்.
உற்சாக பான விளம்பர மோசடி
திரைப்பிரபலங்களின் மேலாளரான ரோஷன் பைண்டர்(Roshan Binder) என்பவர் மும்பை செம்பூர் காவல் நிலையத்தில், இது குறித்து புகாரளித்த பின்னர் இந்த மோசடி வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் 2024 ஆம் ஆண்டு ரோஷன் பைண்டரை அணுகி உற்சாக பானத்தை விளம்பரப்படுத்த 25 திரைப்பிரபலங்கள் வேண்டும் என கேட்டுள்ளனர்.
ஆரம்பத்தில் ₹10 லட்சம் முன்பணம் தருவதாக உறுதியளித்து, அதற்கு ஆதாரமாக ரசீதை காட்டியுள்ளார். ஆனால் பணம் வழங்கப்படவில்லை.
தொடர்ந்து, தாதரில் நடந்த விளம்பர நிகழ்வுக்கு திரைப்பிரபலங்களை அழைத்து வந்துள்ளார் ரோஷன் பைண்டர்.
25 பிரபலங்கள்
இதில், Ankita Lokhande, Jannat Zubair, Ayush Sharma, Tejasswi Prakash, Adrija Roy உள்ளிட்ட 25 பிரபலங்கள் விளம்பரத்தில் நடிக்க தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
மொத்தம் ரூ.1.32 கோடி பணம் வழங்குவதாக உறுதியளித்துள்ளார். மேலும், நம்பிக்கையை பெற ரோஷன் பைண்டருக்கு ரூ.15 லட்சம் காசோலையின் புகைப்படத்தை உத்தரவாதமாக காட்டியுள்ளார்.
35 நாட்களில் அவர்களின் வங்கி கணக்கில் பணம் அளிக்கப்படும் என்ற உறுதியின் அடிப்படையில், பிரபலங்கள் அந்த விளம்பரத்தை தங்களின் சமூகவலைத்தள பக்கத்தில் பகிர்ந்துள்ளனர்.
பல பிரபலங்களுக்கு வழங்கப்பட்ட காசோலைகள் bounce ஆகியுள்ளது. இருந்தாலும் 2 நாட்களில் பணம் வந்து விடும் என குற்றஞ்சாட்டப்பட்டவர் உறுதியளித்துள்ளார்.
அவர்களின் வார்த்தையை நம்பிய, ரோஷன் பைண்டர், பிரபலங்களுக்கு தனது சொந்தப் பணத்தில் இருந்து ரூ.35 லட்சத்தை வழங்கியுள்ளார்.
அதன் பின்னர் அவர்கள் வழங்கிய ரூ.80 லட்சத்திற்கான காசோலையும் மீண்டும் bounce ஆன பிறகு இது ஒரு திட்டமிட்ட மோசடி என்பதை உணர்ந்த ரோஷன் பைண்டர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
இது தொடர்பாக, 5 பேர் மீது வழக்குபதிவு செய்து விசாரணை நடைபெற்று வருகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |