தவறாக 38 ஆண்டுகள் சிறையில் அடைக்கப்பட்ட நபர்: வழங்கப்பட்ட $25 மில்லியன் இழப்பீடு
அமெரிக்காவில் தவறாக சிறையில் அடைக்கப்பட்ட நபருக்கு சுமார் $25 மில்லியன் இழப்பீடு அறிவிக்கப்பட்டுள்ளது.
தவறாக சிறையில் அடைக்கப்பட்ட நபர்
அமெரிக்காவின் மாரிஸ் ஹேஸ்டிங்ஸ் (Maurice Hastings) என்ற 72 வயது முதியவர் கடந்த 1983ம் ஆண்டு ராபர்ட்டா வைடர்மையர்(Roberta Wydermyer) என்ற பெண் தொடர்பான பாலியல் துஷ்பிரயோக மற்றும் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு வாழ்நாள் சிறை தண்டனையை எதிர்கொண்டார்.
38 ஆண்டுகள் சிறைத் தண்டனையை அனுபவித்து வந்த போதிலும், இறுதி வரை தான் எந்தவொரு குற்றத்தையும் புரியவில்லை என்று தொடர் சட்டப் போராட்டத்தை நடத்தி வந்தார்.
இந்த வழக்கு விசாரணையின் போது இங்கிள்வுட் காவல்துறை அதிகாரிகள் இருவர் வேண்டுமென்றே மாரிஸ் ஹேஸ்டிங்ஸை இந்த வழக்கில் சிக்க வைத்ததாக குற்றம் சாட்டப்பட்டது.
இறுதியில் மாரிஸ் ஹேஸ்டிங்ஸ் கடந்த ஆண்டு நிரபராதி என நிரூபிக்கப்பட்டு சிறை தண்டனையில் இருந்து விடுவிக்கப்பட்டார்.
$25 மில்லியன் இழப்பீடு
இந்நிலையில் தவறான குற்றச்சாட்டின் பேரில் 38 ஆண்டுகள் சிறைத் தண்டனையை அனுபவித்த மாரிஸ் ஹேஸ்டிங்ஸுக்கு $25 மில்லியன் இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது.
இந்த இழப்பீடு தொகை தான், மாநில வரலாற்றில் தவறான குற்றச்சாட்டிற்காக வழங்கப்பட்ட மிகப்பெரிய இழப்பீடு தொகையாகும்.
இந்த இழப்பீடு தொகை கடந்த ஆகஸ்ட் மாதம் உறுதி செய்யப்பட்ட நிலையில், இந்த தொகை தொடர்பான அறிவிப்பு பொதுமக்களுக்கு சமீபத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |