மத்திய அமெரிக்க நாடொன்றில் துப்பாக்கிச் சூடு: 6 பொலிஸார் உட்பட 25 பேர் உயிரிழப்பு
மத்திய அமெரிக்க நாட்டில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் குறைந்தது 25 பேர் கொல்லப்பட்டு இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
துப்பாக்கிச் சூடு
மத்திய அமெரிக்காவின் ஹோண்டுராஸ் நாட்டில் ஆயுதம் ஏந்திய மர்ம கும்பல் ஒன்று நடத்திய திடீர் துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் 6 உயர்மட்ட பொலிஸ் அதிகாரிகள் உட்பட 25 பேர் கொல்லப்பட்டு இருப்பதாக அந்நாட்டு காவல்துறை உறுதிப்படுத்தியுள்ளது.
டுரிஜிலோ என்ற நகரின் ரிகோரஸ் பகுதியில் அமைந்துள்ள பனை மர தோட்டத்தில் தொழிலாளர் பணிபுரிந்து கொண்டிருக்கும் போது ஆயுதங்களுடன் நுழைந்த மர்ம கும்பல் திடீர் துப்பாக்கிச் சூட்டை நடத்தினர்.
இதில் தோட்டத்தில் பணிபுரிந்த 19 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

அங்கிருந்து குவாத்தமலா எல்லைக்கு அருகில் ஒமோவா நகரில் சில மணி நேரங்களுக்கு பிறகு நடந்த இரண்டாவது தாக்குதல் சம்பவம் அரங்கேறியது.
பின்னர் டெகுசிகல்பா பகுதியில் ஒமோவா நகருக்கு அருகே கேங்க்ஸ்டர் ஒழிப்பு குழுவில் பணியாற்றி வந்த பொலிஸாரை குறிவைத்து மர்ம கும்பல் தாக்குதல் நடத்தியது.
இதில் துணை கமிஷனர் லெஸ்டர் அமடோர் உட்பட 6 பொலிஸ் அதிகாரிகள் கொல்லப்பட்டனர்.
இந்நிலையில், சம்பந்தப்பட்ட பகுதியில் அமைதியை நிலைநாட்ட இராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளனர்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |