உக்ரைனில் போரிட்டதற்காக அவுஸ்திரேலியருக்கு 20 ஆண்டுகள் சிறை? முதல் முறையாக வழக்குப்பதிவு
அவுஸ்திரேலியாவில் அனுமதியின்றி உக்ரைனில் போரிட்டதாகக் கூறப்படும் குற்றத்திற்காக, இளம் இராணுவ வீரருக்கு 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட வாய்ப்புள்ளதாக தெரிய வந்துள்ளது.
இராணுவத்தின் ரிசர்வ் படை வீரர்
அடிலெய்டின் Felixstowயில் உள்ள ஒரு வீட்டில், அவுஸ்திரேலிய இராணுவத்தின் ரிசர்வ் படை வீரர் வின்சென்ட் டிரான் கைது செய்யப்பட்டார்.
25 வயதான அவரை கைது செய்த அவுஸ்திரேலிய கூட்டாட்சி காவல்துறை அதிகாரிகள், ஒரு கைப்பேசி மற்றும் மடிக்கணினி உட்பட பல மின்னணு சாதனங்களை பறிமுதல் செய்தனர்.
20 ஆண்டுகள் சிறைத்தண்டனை
அவர் மீது வெளிநாட்டு இராணுவ அமைப்பு அல்லது அரசாங்க அமைப்பிற்காக பணிபுரியும், வெளிநாட்டில் வேலை செய்யக் கட்டுப்படுத்தப்பட்ட நபர் என்ற ஒரு குற்றச்சாட்டின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்தக் குற்றத்திற்காக அவுஸ்திரேலிய கூட்டாட்சி காவல்துறை ஒருவர் மீது வழக்குப்பதிவு செய்வது இதுவே முதல் முறையாகும்.
மேலும், வின்சென்ட் டிரானுக்கு இந்த குற்றத்திற்காக அதிகபட்சமாக 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.

| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |