உங்களுக்கு 25 வயது ஆகிறதா? வெறும் ரூ.2000 முதலீடு செய்து கோடீஸ்வரர் ஆகலாம்
ரூ.2000 முதலீடு செய்து ஓய்வூதிய காலத்தில் கோடிகளை அள்ளக்கூடிய திட்டத்தை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.
தற்போதைய காலத்தில் முதலீடு என்பது முக்கியமான ஒன்று என்பதை அனைவரும் அறிந்ததே. ஆனால், நாம் எதில் முதலீடு செய்கிறோம் என்பதில் தான் விடயமே உள்ளது. பொதுவாகவே எல்லோருக்கும் நன்றாக பணம் சம்பாதிக்க வேண்டும் தான் எண்ணமாக இருக்கும்.
தற்போதைய காலத்தில் பணத்தை சம்பாதிப்பதை விட எப்படி முதலீடு செய்கிறோம் என்பது தான் முக்கியமானதாக உள்ளது.
மியூச்சுவல் ஃபண்டு எஸ்ஐபி - Mutual Fund SIP (முறைசார் முதலீட்டு திட்டம்)
மியூச்சுவல் ஃபண்ட் எஸ்ஐபி திட்டமானது பங்குச்சந்தையை சார்ந்து செயல்பட்டாலும் மற்ற முதலீடுகளை ஒப்பிடுகையில் சிறந்த நீண்ட கால வருவாயை வழங்குகின்றன. உ
ங்களுடைய 25 வயதில் ஓய்வூதிய திட்டத்தை தொடங்கினால் சேமிப்பதற்கு நேரம் இருக்கும். இதுவே உங்களுக்கு 35 வயது ஆகியிருந்தால் 60 வயதாகும் வரை சேமிக்க இன்னும் 25 ஆண்டுகள் மட்டுமே உள்ளது.
இதில் சராசரியாக உங்களுக்கு 12 சதவீத ரிட்டர்ன் (Return) கிடைக்கிறது. நீங்கள் பங்குகளை வாங்குவதை விட இதில் முதலீடு செய்வது குறைவான ஆபத்து என்றும் சொல்லப்படுகிறது.
35 வயதில் முதலீடு
உங்களுக்கு 35 வயது இருந்து ஓய்வுபெற இன்னும் 25 வருடங்கள் இருந்தால் எஸ்ஐபி-யில் மாதம் குறைந்தபட்சம் ரூ.6,000 முதலீடு செய்ய வேண்டும்.
அதன்படி நீங்கள் 25 ஆண்டுகளில் ரூ.18,00,000 முதலீடு செய்வீர்கள். இதற்கு சராசரியாக 12 % ரிட்டர்ன் கிடைத்தால் ரூ.95,85,811 வட்டியாக பெறுவீர்கள்.
அப்படியானால், உங்களது 60 வயதில் மொத்த கார்பஸ் தொகை ரூ.1,13,85,811 ஆக இருக்கும்.
30 வயதில் முதலீடு
உங்களுக்கு 30 வயது இருந்து ஓய்வுபெற இன்னும் 30 வருடங்கள் இருந்தால் எஸ்ஐபி-யில் மாதம் குறைந்தபட்சம் ரூ.3,000 முதலீடு செய்ய வேண்டும்.
அதன்படி நீங்கள் 30 ஆண்டுகளில் ரூ.10,80,000 முதலீடு செய்வீர்கள். இதற்கு சராசரியாக 12 % ரிட்டர்ன் கிடைத்தால் ரூ.95,09,741 வட்டியாக பெறுவீர்கள்.
அப்படியானால், உங்களது 60 வயதில் மொத்த கார்பஸ் தொகை ரூ.1,05,89,741ஆக இருக்கும்.
25 வயதில் முதலீடு
உங்களுக்கு 25 வயது இருந்து ஓய்வுபெற இன்னும் 35 வருடங்கள் இருந்தால் எஸ்ஐபி-யில் மாதம் குறைந்தபட்சம் ரூ.2,000 முதலீடு செய்ய வேண்டும்.
அதன்படி நீங்கள் 30 ஆண்டுகளில் ரூ.8,40,000 முதலீடு செய்வீர்கள். இதற்கு சராசரியாக 12 % ரிட்டர்ன் கிடைத்தால் ரூ.1,21,50,538 வட்டியாக பெறுவீர்கள்.
அப்படியானால், உங்களது 60 வயதில் மொத்த கார்பஸ் தொகை ரூ.1,29,90,538 ஆக இருக்கும்.
இந்த செய்தியை நீங்கள் முதலீடு செய்வதற்குரிய ஆலோசனையாக எடுத்துக் கொள்ளக் கூடாது. நீங்கள் முதலீடு செய்வதற்குரிய முடிவை எடுக்கும் போது பொருளாதார ஆலோசகரிடம் ஆலோசனை கேட்ட பிறகு முடிவை எடுக்க வேண்டும் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |