250 கோடி ரூபாய் மோசடியில் சிக்கிய வேலையில்லாத இளைஞர்.., அவர் சொன்ன காரணம்?
வேலையில்லாத இளைஞர் ஒருவரது பெயரை வைத்து வங்கிக்கணக்கை உருவாக்கி ரூ.250 கோடி மோசடி நடந்துள்ளது.
ரூ.250 கோடி மோசடி
இந்திய மாநிலமான உத்தர பிரதேசம், முசாபர் நகரைச் சேர்ந்த வேலையில்லாத இளைஞர் ரூ.250 கோடி மதிப்புள்ள ஜிஎஸ்டி இ-வே பில்லிங் பரிவர்த்தனைகள் தொடர்பாக சிக்கியுள்ளார்.
இதுபற்றி ஜிஎஸ்டி அதிகாரிகள் அவரது வீட்டிற்கு சென்று கூறிய பிறகு தான் இளைஞருக்கு தெரியவந்துள்ளது.
சில நாட்களுக்கு முன்பாக அஸ்வினி குமார் என்ற இளைஞருக்கு வேலைவாய்ப்பு தொடர்பாக வாட்சப்பில் செய்தி ஒன்று வந்துள்ளது.
இதனால் வேலை கிடைக்க வேண்டும் என்று தனது வீட்டு மின் கட்டணம், தந்தையின் ஆதார் அட்டை உள்ளிட்ட ஆவணங்களை தெரியாத நபர் ஒருவருக்கு அனுப்பியுள்ளார்.
மேலும், ரூ.1750 பணத்தையும் அனுப்பியுள்ளார். ஆனால், அவருக்கு வேலையும் கிடைக்கவில்லை. அதற்கு மாறாக அவர் கொடுத்த தகவல்களை வைத்து தவறான வங்கிக்கணக்கை உருவாக்கியுள்ளனர்.
அதை வைத்து ஒரு நிறுவனத்தை தொடங்கி சுமார் ரூ.250 கோடி இ-வே பில்லிங் (E-way billing) மோசடி நடந்துள்ளது. இந்த வழக்கு குறித்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |