நைஜர் பள்ளியில் திடீர் தீ விபத்து! 26 குழந்தைகள் உடல் கருகி பலியான சோகம்.. கதறும் குடும்பத்தினர்
நைஜீரியாவில் உள்ள பள்ளியில் திடீரென ஏற்பட்ட தீ விபத்தால் 26 குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜரில் இருக்கும் பள்ளி ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. நைஜீரியா நாட்டின் இரண்டாவது பெரிய நகரமான மராடி பகுதியில் உள்ள பள்ளி ஒன்றில் கடந்த திங்கட்கிழமை அன்று தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
இந்த பயங்கர விபத்தில் 3 முதல் 8 வயதுக்குட்ப்பட்ட 26 மாணவர்கள் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும் இந்த விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
மேலும் கடந்த ஏப்ரல் மாதம் நியாமோவின் புகர் பகுதியில் நடந்த தீ விபத்தில் 20 மாணவர்கள் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.
தற்பொழுது மீண்டும் அதே போன்று நடந்துள்ளது பெற்றோர்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
வைக்கோலால் கட்டப்பட்ட வகுப்பறையில் தான் இது போன்ற அசம்பாவிதங்கள் நடக்க காரணமாக உள்ளதாக ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் தெரிவித்துள்ளனர்.