அப்பா வயது நபரை திருமணம் செய்த பெண்! வயதை கடந்த காதலால் எதிர்கொள்ளும் விமர்சனம்
அமெரிக்காவைச் சேர்ந்த பெண்ணொருவர் தன்னை விட 26 ஆண்டுகள் மூத்த நபரை திருமணம் செய்ததால் கடுமையான விமர்சனங்களை எதிர்கொள்வதாக வேதனை தெரிவித்துள்ளார்.
26 வயது மூத்தவருடன் திருமணம்
ஃபுளோரிடாவைச் சேர்ந்தவர் 45 வயது அலிசன் (Allison). இவரது கணவர் பென் ஹார்ன்ஸ்பை 26 ஆண்டுகள் இவரை விட மூத்தவர். கடந்த 1998ஆம் ஆண்டு ஒருவரையொருவர் சந்தித்திக் கொண்ட இந்த ஜோடி பின் காதல் வயப்பட்டு ஒன்றாக வாழ்ந்து வருகிறது.
இவர்களுக்கு மூன்று பிள்ளைகள் மற்றும் இரட்டையர் என 5 குழந்தைகள் உள்ளனர். தற்போது ஹார்ன்ஸ்பைக்கு 71 வயது என்பதால் தங்கள் பிள்ளைகளின் ஆசிரியர்கள் அவரை தாத்தாவாக கருதுவதாக அலிசன் வேதனை தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் 26 வயது மூத்தவருடன் வாழ்ந்து வருவதால் பலதரப்பட்ட எதிர்மறை விமர்சனங்களை எதிர்கொள்வதாக கூறியுள்ளார்.
எதிர்மறை விமர்சனம்
இதுதொடர்பாக அலிசன் கூறுகையில், 'பொதுமக்கள் என்னை பென்னின் மகள் என்று தவறாக கருதுகிறார்கள். ஆனால் அவரது குடும்பத்தினர் என்னை மிகவும் ஏற்றுக் கொண்டனர். அவரது மகிழ்ச்சியைப் பார்த்து அவர்கள் ஆனந்தமடைகின்றனர்.
எனினும் சில நண்பர்கள், சக ஊழியர்கள் மகிழ்ச்சியான இந்த விடயத்தை ஏற்றுக்கொள்ளவில்லை. அவர்கள் வயது இடைவெளியால் ஆச்சரியமடைந்தனர். எங்கள் உறவை மற்றவர்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் என்பதை நாங்கள் அறிந்தோம், ஆனால் நாங்கள் அத்தகைய இயல்பான தொடர்பை உணர்ந்தோம் - நாங்கள் பிரிந்து இருக்க விரும்பவில்லை.
எங்கள் இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் சில தவறான இடுகை கருத்துக்களை பெற்றுள்ளோம். ஆனாலும், நீங்கள் ஒருவரையொருவர் உண்மையாக நேசிக்கிறீர்கள் என்றால், உங்கள் உறவை ஆராய்வதில் இருந்து வெளிப்புறத்தில் எந்த சத்தமும் உங்களை தடுக்காது' என தெரிவித்துள்ளார்.
பென் ஒரு இளம்பெண்ணை வளைத்துவிட்டார் என்றும், இந்த உறவு நீடிக்காது என்றும் சிலர் கேலி செய்ததாக தம்பதியினர் குறிப்பிட்டனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |