மேடையை விட்டு ஓடிய பிரபல பாப் பாடகி! வைரலான புகைப்படங்கள்
பிரபல பாப் பாடகி டெய்லர் ஸ்விஃப்ட் இசை நிகழ்ச்சியின் போது மேடையில் இருந்து ஓடிய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகியுள்ளது.
இசை கச்சேரி
அமெரிக்க மாகாணம் ஓஹியோவின் சின்சினாட்டியில் உள்ள Paycor ஸ்டேடியத்தில் பிரபல பாப் பாடகி டெய்லர் ஸ்விஃப்டின் இசை நிகழ்ச்சி நடந்தது.
இறுதிப்பாடலை முடித்த பின்னர் டெய்லர் ஸ்விஃப்ட் தரையில் ஒரு ரகசிய மேடையைத் திறந்து பின் பகுதில் வெளியேற திட்டமிட்டிருந்தார். ஆனால் அவரது எதிர்பார்ப்புக்கு மாறாக Panel இயல்பான நேரத்தில் செயல்படத் தவறியது.
இதன் காரணமாக அவர் விரைவான நடவடிக்கையாக, தனது முக்கிய மேடையின் பின்புறம் ஓட முடிவு செய்தார்.
வைரலான புகைப்படங்கள்
அதன்படி அவர் மேடையை விட்டு விரைவாக வெளியேறினார். ஸ்விஃப்ட் ஓடியதை ரசிகர்கள் பலரும் படம் பிடித்தனர். இதுதொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் தற்போது வைரலாகியுள்ளது.
எனினும், டெய்லர் ஸ்விஃப்ட் அவர் இவ்வாறு ஓடுவதன் மூலம் நிகழ்ச்சியை திட்டமிட்டப்படி நடத்துவதில் அர்ப்பணிப்புடன் இருந்ததாக ரசிகர்கள் சிலர் பாராட்டினர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |