11 வயது சிறுமியை துஷ்பிரயோகம் செய்து கொன்ற கொடூரன்..33 ஆண்டுகளுக்கு பின் மரண தண்டனை
அமெரிக்காவில் 11 வயது சிறுமி மற்றும் அவரது பராமரிப்பாளர் பெண்ணை துஷ்பிரயோகம் செய்து கொன்ற வழக்கில், 33 ஆண்டுகளுக்கு பின் குற்றவாளிக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.
11 வயது சிறுமி, பராமரிப்பாளர் படுகொலை
அமெரிக்காவில் கடந்த 1990ஆம் ஆண்டு ராபின் கார்னெல் எனும் 11 வயது சிறுமியும், அவரது பராமரிப்பாளர் லிசா ஸ்டோரி (32) என்ற பெண்ணும் ஜோசப் ஜீலர் என்பவரால் துஷ்பிரயோகம் செய்யப்பட்டு கொல்லப்பட்டனர்.
ஜீலர் கைது செய்யப்பட்ட நிலையில், அவர் தொடர்பிலான வழக்கு மீதான விசாரணை புளோரிடாவில் நடைபெற்றது. அப்போது, 61 வயதாகும் ஜோசப் ஜீலருக்கு நீதிபதி மரண தண்டனை அளித்து தீர்ப்பு அளித்தார்.
குற்றவாளியால் சலசலப்பு
2016ஆம் ஆண்டில் கைது செய்யப்பட்ட ஜீலர், நடுவர் மன்றத்தின் மரண பரிந்துரைக்கு எதிராக நீதிபதியிடம் வாதிடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.
முன்னதாக, ஜீலர் வழக்கு விசாரணையின்போது 'இதற்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை, நான் என் குற்றமற்றவனாக இருக்கிறேன்' எனக்கூறியது நீதிமன்றத்தில் சலசலப்பை ஏற்படுத்தியது.
எனினும், பல மணிநேரம் கழித்து நீதிமன்ற அறைக்குள் இருந்த நீதிபதி, ஜீலருக்கு மரண தண்டனை விதித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |