கொட்டித்தீர்த்த மழையால் ஏற்பட்ட பெருவெள்ளம்: வட இந்தியாவில் கேரளாவைச் சேர்ந்த 28 பேர் மாயம்
இந்தியாவின் உத்தராகண்ட் மாநிலத்தில் மேக வெடிப்பு என்னும் நிகழ்வைத் தொடர்ந்து ஏற்பட்ட பெருவெள்ளத்தில் ஏராளமானோர் மாயமாகியுள்ளார்கள்.
கேரளாவைச் சேர்ந்த 28 பேர் மாயம்
செவ்வாயன்று உத்தராகண்ட் மாநிலத்தில் ஏற்பட்ட பெருவெள்ளத்தில் ஏராளமானோர் மாயமாகியுள்ளார்கள்.
அவர்களில் கேரளாவைச் சேர்ந்த 28 பேர் கொண்ட சுற்றுலாப்பயணிகள் குழு ஒன்றும் அடங்கும்.
புதன்கிழமை காலை 8.30 மணியளவில் உத்தர்காஷி என்னுமிடத்திலிருந்து கங்கோத்ரி என்னுமிடத்துக்கு அவர்கள் புறப்பட்டபோது அவர்கள் பெருவெள்ளத்தில் சிக்கியுள்ளார்கள்.
காணாமல் போனவர்களில் 20 பேர் கேரளாவிலிருந்து வந்து மஹாராஷ்ட்ராவில் குடியமர்ந்தவர்கள் என்றும் மற்றவர்கள் கேரளாவிலிருந்து வந்தவர்கள் என்றும் அவர்களுடைய உறவினர்கள் தெரிவித்துள்ளார்கள்.
அவர்கள் அனைவரும் 10 நாட்கள் உத்தராகண்ட் சுற்றுலாவுக்காக புறப்பட்டுள்ளார்கள்.
ஆனால், அவர்களுக்கு சுற்றுலா ஏற்பாடு செய்த ட்ராவல் ஏஜன்சியால் அவர்களைக் குறித்த எந்த விவரத்தையும் கொடுக்க இயலவில்லை என்கிறார்கள் அவர்களுடைய உறவினர்கள்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |