ஒரே நாளில் 29 பேருக்கு தூக்குத் தண்டனை: சர்வதேச கண்டனத்தை எதிர்கொண்டுள்ள நாடு
ஈரான் ஒரே நாளில் 29 பேருக்கு தூக்குத் தண்டனை நிறைவேற்றியுள்ளது.
29 பேருக்கு தூக்குத் தண்டனை
புதன்கிழமையான நேற்று ஈரான் ஒரே நாளில் 29 பேருக்கு தூக்குத் தண்டனை நிறைவேற்றியுள்ளது.
இதில் 26 பேர் ஒரே சிறைச்சாலையை சேர்ந்தவர்கள் என்று மனித உரிமை குழு தெரிவித்துள்ளது.
2022ம் ஆண்டு போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு தூக்குத் தண்டனை நிறைவேற்றியது தொடர்பாக சர்வதேச அமைப்புகளின் கண்டனத்தை எதிர்கொண்ட ஒருநாள் கழித்து இந்த தூக்குத் தண்டனையானது நிறைவேற்றப்பட்டுள்ளது.
2 ஆப்கான் நாட்டவருக்கு தூக்குத் தண்டனை
நார்வே நாட்டை தளமாக கொண்ட ஈரான் மனித உரிமைகள் குழு வழங்கிய தகவலில், தூக்கு தண்டனை வழங்கப்பட்டவர்களில் 26 பேருக்கு தெஹ்ரானுக்கு வெளியே Karaj-ல் அமைந்துள்ள Ghezelhesar சிறைச்சாலையில் தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது என்றும், மீதமுள்ள 3 பேர் Karaj's city சிறைச்சாலையில் தண்டனையானது நிறைவேற்றப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளது.
தூக்கிலிடப்பட்டவர்களில் இரண்டு பேர் ஆப்கானிஸ்தான் நாட்டை சேர்ந்தவர்கள், அவர்கள் மீது கொலை, போதைப்பொருள் கடத்தல் மற்றும் பாலியல் அத்துமீறல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |