அடுத்த மாதம் திருமணம்..கனடாவில் தமிழக மாணவர் மர்மமான முறையில் உயிரிழப்பு
Tamilnadu guy died in canada: இந்தியாவின் தமிழ்நாட்டைச் சேர்ந்த மாணவர் ஒருவர், கனடாவில் இருந்து புறப்பட இருந்தபோது உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ்நாட்டின் ஊட்டியைச் சேர்ந்த அரவிந்தன் என்ற மாணவர், கனடாவில் இருந்து இந்தியாவிற்கு புறப்பட இருந்த நிலையில் மர்மமான முறையில் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
கனடாவில் உயர் கல்வி
நீலகிரி மாவட்டம் ஊட்டியைச் சேர்ந்த 29 வயது இளைஞர் அரவிந்தன். இவர் கனடாவில் உயர் கல்வி பயின்று வந்தார்.

அடுத்த மாதம் திருமணம் நடைபெற இருந்த நிலையில், நேற்றைய தினம் அரவிந்தன் இந்தியாவிற்கு புறப்பட இருந்தபோது உயிரிழந்துள்ளார்.
அரவிந்தனின் பெற்றோரை தொடர்புகொண்ட கனேடிய பொலிஸார், அவர் 18வது மாடியில் இருந்து தவறி கீழே விழுந்ததில் உயிரிழந்ததாக கூறியுள்ளனர்.
இந்த நிலையில், அரவிந்தனின் பெற்றோர் தங்கள் மகனின் இறப்பில் சந்தேகம் இருப்பதாகவும், உடலை உடனடியாக இந்தியாவிற்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்கக் கோரியும் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |