ஒரே நாளில் 7,492 விமானங்கள்: பிரித்தானியர்களுக்கு கடும் நெரிசல், குழப்பம் ஏற்பட வாய்ப்பு
29592 Flights Scheduled Across Spain Airports: ஸ்பெயினில் சாதனை அளவிலான விமானங்கள் இயக்கப்பட உள்ளதால், கடும் பயண நெரிசல் மற்றும் குழப்பம் ஏற்பட வாய்ப்புள்ளது.
ஸ்பெயின் நாட்டில் விமான நிலையங்களில் சாதனை அளவிலான விமானங்கள் இயக்கப்பட உள்ளதால், பிரித்தானிய சுற்றுலாப் பயணிகள் வழக்கத்தை விட அதிக நெரிசலான பயண சூழலை எதிர்கொள்ள நேரிடலாம்.
விமானப் பயணங்களின் எண்ணிக்கை
ஸ்பெயின் நாட்டில் 29-ஆம் திகதி முதல் 31-ஆம் திகதி வரை, விமானப் பயணங்களின் எண்ணிக்கை சாதனை அளவை எட்டவுள்ளது.
கோடை விடுமுறையின் கடைசி வார இறுதி என்பதாலும், அதே வேளையில் பிரித்தானியாவில் பொது விடுமுறை என்பதாலும், பலர் தங்கள் விடுமுறையின் ஒரு பகுதியாக வெளிநாட்டிற்கு செல்லவோ அல்லது அங்கிருந்து திரும்பவோ இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்வார்கள்.
ஸ்பெயின் விமான நிலையங்களை நிர்வகிக்கும் நிறுவனமான AENA-வின் கட்டுப்பாட்டில் உள்ள விமான நிலையங்களில், இக்காலகட்டத்தில் மொத்தம் 29,592 விமானங்கள் இயக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாக Majorca Daily Bulletin செய்தி வெளியிட்டுள்ளது.
7,492 விமானங்கள்
கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தில் இருந்த 28,826 விமானங்களுடன் ஒப்பிடுகையில் 2.6 சதவீத அதிகரிப்பாகும்.
மேலும், ஞாயிற்றுக்கிழமை மிகவும் பரபரப்பான நாளாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது; அன்று மட்டும் 7,492 விமானங்கள் இயக்கப்படவுள்ளன. இதனால் ஸ்பெயின் நாட்டு விமான நிலையங்கள் கடும் பயண நெரிசலை சந்திக்க தயாராகி வருகின்றன.
அந்த விமான நிலையங்களுக்கு செல்லும் மற்றும் திரும்பும் பிரித்தானிய சுற்றுலாப் பயணிகள், வழக்கத்தை விட அதிக நெரிசலான பயண சூழலை எதிர்கொள்ள நேரிடலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |