புறப்படத் தயாரான 2 விமானங்களின் இறக்கைகள் உரசிக் கொண்டதால் பரபரப்பு: அமெரிக்க ஏர்லைன்ஸ் அதிரடி முடிவு
2 American Airlines flight Clip Wings at Reagan National Airport: அமெரிக்கன் ஏர்லைன்ஸ் விமானங்களின் இறக்கைகள் ஒன்றுடன் ஒன்று உரசிக் கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உரசிக் கொண்ட விமானத்தின் இறக்கைகள்
அமெரிக்காவின் ரொனால்ட் ரீகன் வாஷிங்டன் தேசிய விமான நிலையத்தில் அமெரிக்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் இரண்டு விமானங்கள் புறப்படத் தயாராகிக் கொண்டிருந்தது.
அப்போது எதிர்பாராத விதமாக இரண்டு விமானத்தின் இறக்கைகளும் ஒன்றுக்கு ஒன்று உரசிக் கொண்டது என அமெரிக்காவின் மத்திய விமான போக்குவரத்து நிர்வாகம்(FAA) தகவல் தெரிவித்துள்ளது.
ஓடு பாதைக்கு செல்லும் வழியில் டல்லாஸ் நகருக்கு பறக்க புறப்பட்ட போயிங் 737 ரக விமானத்தின் இறக்கை முனை, சிகாகோ நகருக்கு பறக்க தயாராக இருந்த விமானத்தின் இறக்கையின் மீது உரசியது.
Two American Airlines flights clipped wings at Reagan National Airport in Washington, D.C., on Friday, causing one winglet to break off and delaying passengers. In a statement provided to CBS News, American Airlines said that both planes returned to their gates and were “removed from service for inspection by our maintenance team.” The FAA is investigating the collision.
— CBS News (@CBSNews) November 28, 2026
அதிர்ஷ்டவசமாக இந்த விபத்தில் யாருக்கும் பயணிகளுக்கோ, விமான பணியாளர்களுக்கோ எந்தவொரு காயமும் ஏற்படவில்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
விபத்தை தொடர்ந்து இரண்டு விமானங்களின் பயண சேவையும் நிறுத்தப்பட்டு சேதமடைந்த இரண்டு விமானங்களும் பழுதுபார்க்கும் பணிகளுக்காக அனுப்பி வைக்கப்பட்டன.
மேலும் இந்த விபத்து தொடர்பான விசாரணை விரிவாக நடத்தப்படும் என்று மத்திய விமானப் போக்குவரத்து நிர்வாகம் அறிவித்துள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |