சர்வதேச மகளிர் தினத்தில் புதிய அவதாரம் எடுத்துள்ள உக்ரைன் பெண்கள்: ரஷ்யாவிற்கு எதிராக சூளுரை
ரஷ்ய தாக்குதலை எதிர்த்து தங்கள் தாய்நாட்டை பாதுகாக்கும் பணியில் அந்த நாட்டின் பெண்களும் போர்க்களத்தில் குதித்து இருப்பது உக்ரைன் ராணுவத்திற்கு கூடுதல் பலத்தை ஏற்படுத்தியுள்ளது.
உலகளவில் (இன்று) மார்ச் 08ம் திகதி சர்வதேச பெண்கள் தினமாக கொண்டாப்பட்டு வரும் வேளையில், இந்த ஆண்டு உக்ரைனில் உள்ள பெரும்பாலான பெண்கள் தங்கள் பெண்கள் தினத்தை வித்தியாசமான முறையில் கையில் இயந்திர துப்பாக்கிகளுடன் கொண்டாட முன்வந்துள்ளனர்.
மேலும், உக்ரைனுக்குள் அத்துமீறி புகுந்து தாக்குதல் நடத்தும் ரஷ்ய ராணுவ துருப்புகளை நாய்களை சூடுவது போல் சுட்டு வீழ்த்துவோம் என எச்சரிக்கை வீடியோ பதிவை ஒன்றையும் வெளியிட்டுள்ளன.
⚡Appeal of women soldiers:
— Факти ICTV (@ICTV_Fakty) March 7, 2022
We will destroy enemies on every inch of Ukrainian land!
Glory to Ukraine! ?? Death to enemies! ? pic.twitter.com/esR5cNiSfD
இதையடுத்து, அந்த வீடியோவில் தொடர்ந்து பேசிய உக்ரைன் ராணுவ வீராங்கனைகள், ரஷ்ய படைகளை எதிர்த்து போராட சென்றிருக்கும் ஆண்களை முன்பு நாங்கள் வாழ்த்தி அனுப்பினோம்.
அதனை தொடர்ந்து தற்போது, எங்கள் குழந்தைகள் மற்றும் உக்ரைன் நாட்டின் அடுத்த தலைமுறையை வாரிசுகளை பத்திரப்படுத்தி பாதுகாப்பான இடத்திற்கு மாற்றிவிட்டதால், இன்று நாங்களும் எங்கள் தாய்நாட்டை பாதுகாக்க ஆண்களுடன் இணைந்து கைகளில் ஆயுதம் தூக்கியுள்ளோம்.
இனி உக்ரைன் மண்ணிற்குள் நுழையும் ஒவ்வொரு ஆக்கிரமிப்பாளர்களையும் துடைத்தெறிந்து, நாய்களை சுட்டுவீழ்த்துவது போல் வீழ்த்துவோம் எனவும் வாழ்க உக்ரைன் எனவும் சூளுரைத்துள்ளனர்.
இவர்களை போலவே உக்ரைன் நாட்டு துணை ஜனாதிபதியின் மனைவியும் சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு உக்ரைன் ராணுவத்துடன் இணைந்து எதிரிகளை சுட்டுவீழ்த்தும் பணியில் இறங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.