கனடாவில் குண்டு பாய்ந்து உயிரிழந்த இந்திய இளம்பெண்: வழக்கில் மேலும் ஒரு முன்னேற்றம்

Canada Indian Origin
By Balamanuvelan Aug 09, 2025 05:21 AM GMT
Report

 கனடாவில் இரண்டு கும்பல்களுக்கிடையிலான மோதலின்போது தவறுதலாக குண்டு பாய்ந்து உயிரிழந்த இளம்பெண் விவகாரத்தில் இரண்டாவது குற்றவாளியும் கைது செய்யப்பட்டுள்ளார்.

குண்டு பாய்ந்து உயிரிழந்த இந்திய இளம்பெண்

இந்தியாவின் பஞ்சாபைச் சேர்ந்தவரான ஹர்சிம்ரத் (Harsimrat Randhawa, 21) என்னும் இளம்பெண், கனடாவுக்குக் கல்வி கற்கச் சென்றிருந்தார். 

கனடாவில் குண்டு பாய்ந்து உயிரிழந்த இந்திய இளம்பெண்: வழக்கில் மேலும் ஒரு முன்னேற்றம் | 2Nd Arrest In Indian Girl Murder In Canada

பகுதி நேர பணி செய்துவந்த ஹர்சிம்ரத், ஏப்ரல் மாதம் 17ஆம் திகதி இரவு 7.30 மணியளவில், ஹாமில்ட்டன் பகுதியில் பேருந்துக்காக காத்திருந்திருக்கிறார்.

அப்போது அங்கு இரண்டு கார்கள் வேகமாக வந்து நின்றுள்ளன. அதேபோல சாலையின் மறுபக்கம் இரண்டு கார்கள் வந்து நிற்க, ஒருபக்கம் நின்ற கருப்பு நிற காரிலிருந்த ஒருவர், மறுபக்கம் நின்றுகொண்டிருந்த ஒரு வெள்ளை நிற காரிலிருந்தவர்களை நோக்கி துப்பாக்கியால் சரமாரியாக சுட்டுள்ளார். 

ட்ரம்பால் அமெரிக்காவை புறக்கணித்த கனேடியர்களுக்கு கிடைத்த எதிர்பாராத அதிர்ச்சி

ட்ரம்பால் அமெரிக்காவை புறக்கணித்த கனேடியர்களுக்கு கிடைத்த எதிர்பாராத அதிர்ச்சி

அப்போது, அவர் சுட்ட ஒரு குண்டு, பேருந்துக்காக காத்திருந்த ஹர்சிம்ரத்தின் மார்பில் பாய்ந்துள்ளது.

துப்பாக்கியால் சுட்டவர்கள் தப்பியோடிவிட, மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட ஹர்சிம்ரத், காயங்கள் காரணமாக பலியாகிவிட்டார்.

இரண்டாவது குற்றவாளியும் சிக்கினார்

இந்நிலையில், ஹர்சிம்ரத் உயிரிழக்கக் காரணமாக இருந்த நபர்களில் ஒருவர் செவ்வாயன்று கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்திருந்தனர்.  

கனடாவில் குண்டு பாய்ந்து உயிரிழந்த இந்திய இளம்பெண்: வழக்கில் மேலும் ஒரு முன்னேற்றம் | 2Nd Arrest In Indian Girl Murder In Canada

கனடாவின் ஒன்ராறியோவிலுள்ள நயாகரா ஃபால்ஸ் என்னும் இடத்தில் கைது செய்யப்பட்ட அந்த நபரின் பெயர் ஜெர்டைன் ஃபோஸ்டர் (Jerdaine Foster, 32).

அவர் மீது ஒரு கொலைக்குற்றச்சாட்டும், மூன்று கொலை முயற்சிக் குற்றச்சாட்டுகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன.

அதைத் தொடர்ந்து, North Yorkஇல் Obiesea Okafor (26) என்னும் ஒருவர் வியாழனன்று கைது செய்யப்பட்டுள்ளார்.

அவர் மீது மூன்று கொலை முயற்சிக் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இந்த சம்பவத்தில் குறைந்தது ஏழு பேர் சம்பந்தப்பட்டிருக்கலாம் என பொலிசார் கருதும் நிலையில், மற்றவர்களையும் பிடிக்க பொலிசார் தீவிர முயற்சிகள் மேற்கொண்டுவருகிறார்கள்.

 உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.      


3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, புங்குடுதீவு 10ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Wembley, United Kingdom

10 Sep, 2023
14ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

20 Jul, 2012
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், Brentwood, United Kingdom

13 Aug, 2024
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, கொழும்பு, வெள்ளவத்தை

11 Aug, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய், Sudbury Hill, United Kingdom, Ealing, United Kingdom

27 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், Wellawatte

13 Aug, 2025
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, உடுப்பிட்டி, கொழும்பு

10 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
மரண அறிவித்தல்

நாவற்குழி, Singen, Germany, London, United Kingdom

10 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ். கரவெட்டி, Scarborough, Canada

03 Aug, 2024
12ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், இணுவில்

11 Aug, 2014
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, கிளிநொச்சி, வட்டக்கச்சி இராமநாதபுரம்

08 Aug, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
மரண அறிவித்தல்

சில்லாலை, Wellawatte, சிட்னி, Australia

08 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, தெல்லிப்பழை, Montreal, Canada

06 Aug, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நயினாதீவு, புங்குடுதீவு, கொழும்பு

13 Jul, 2026
மரண அறிவித்தல்
43ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கட்டப்பிராய், Villiers-sur-Marne, France

11 Aug, 2022
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், Tooting, United Kingdom

05 Aug, 2026
மரண அறிவித்தல்

நாகர்கோவில், உசன், சிட்னி, Australia

07 Aug, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US