2025 IPL; பந்தில் உமிழ்நீர் பயன்படுத்த அனுமதி - புதிதாக அறிமுகமாகும் 2வது பந்து விதி

Cricket IPL 2025
By Karthikraja Mar 20, 2025 12:57 PM GMT
Report

 வரும் ஐபிஎல் தொடரில் இரண்டாவது பந்து விதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

2025 ஐபிஎல் தொடர்

18 வது ஐபிஎல் தொடர் வரும் மார்ச் 22 ஆம் திகதி தொடங்கி மே 25 ஆம் திகதி வரை நடைபெற உள்ளது.

கொல்கத்தாவின் ஈடன் கார்டன் மைதானத்தில், நடைபெற உள்ள முதல் போட்டியில், கொல்கத்தா மற்றும் பெங்களூரு அணிகள் மோத உள்ளது. 

2025 ipl

இந்நிலையில், இந்த ஐபிஎல் தொடரில் புதிதாக 2 விதிகளை பிசிசிஐ அமல்படுத்த உள்ளது.

மும்பையில் உள்ள பிசிசிஐ தலைமை அலுவலகத்தில் இன்று, ஐபிஎல் அணிகளின் அணித்தலைவர்கள் மற்றும் நடுவர்கள் உடனான நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் இந்த முடிவெடுக்கப்பட்டுள்ளது.

பந்தில் உமிழ்நீர் பயன்படுத்த அனுமதி

பந்து தேய்ந்துள்ள நிலையில், பந்து வீச்சாளர்கள் reverse swing செய்வதற்காக, பந்தின் ஒரு பக்கத்தில் உமிழ்நீரை தடவி, அதை பளபளப்பாக மாற்றுவார்கள்.

2019 ஆம் ஆண்டு கொரோன காலக்கட்டத்தில், பந்து வீச்சாளர்கள் பந்தில் உமிழ்நீரை பயன்படுத்த ஐசிசி தடை விதித்தது. 

saliva ban lift in ipl

இந்த தடையை நீக்குமாறு, முகமது ஷமி, டிம் சவுத்தி, வெர்னான் பிலாண்டர் உள்ளிட்ட பந்து வீச்சாளர்கள் ஐசிசிக்கு கோரிக்கை வைத்தனர். 

13 மைதானங்களில் ஐபிஎல் தொடக்க விழா - கலந்துகொள்ளும் பிரபலங்கள் யார் யார் தெரியுமா?

13 மைதானங்களில் ஐபிஎல் தொடக்க விழா - கலந்துகொள்ளும் பிரபலங்கள் யார் யார் தெரியுமா?

இந்நிலையில், இந்த ஐபிஎல் தொடரில் பந்தில் உமிழ் நீரை பயன்படுத்த விதிக்கப்பட்ட தடை நீக்கப்பட்டுள்ளது.

இரண்டாவது பந்து விதி

அதே போல், இரண்டாவது பந்து(second ball rule) என்ற விதியை இந்த ஐபிஎல் தொடரில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.

மாலை நேரங்களில் நடைபெறும் போட்டிகளில், இரண்டாவது இன்னிங்ஸ் விளையாடும் போது மைதானத்தில் பனியின் தாக்கம் இருக்கும் போது, பந்து வீச்சாளர்கள் பந்தை பிடிப்பது கடினமாக இருக்கும். 

2nd ball rule in ipl

இந்த இயற்கை சூழல், துடுப்பாட்டகாரர்களுக்கு சாதகமாக இருப்பதால், இந்த விதி அமல்படுத்தப்படுகிறது. 

ஐபிஎல் போட்டியில் நடுவராக உள்ள விராட் கோலியின் முன்னாள் அணி வீரர்

ஐபிஎல் போட்டியில் நடுவராக உள்ள விராட் கோலியின் முன்னாள் அணி வீரர்

இதன்படி, மாலை நேரங்களில் நடைபெறும் போட்டிகளில் இரண்டாவது இன்னிங்ஸில், 11வது ஓவர்களுக்கு பிறகு பந்தை மாற்ற வேண்டுமா என்பதை, மைதானத்தில் நிலவும் பனியை பொறுத்து நடுவர் முடிவெடுப்பார்.

பிற்பகலில் பனியின் தாக்கம் இருக்காது என்பதால், அப்போது நடைபெறும் போட்டிகளில் இந்த விதி இருக்காது.       

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.

  

மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US