இடம் மாற்றப்பட்ட 2வது பெலுகா திமிங்கலம் உயிரிழப்பு: சோகத்தில் சிகாகோ அக்வாரியம்
2nd Beluga Whale Dies in Chicago Aquarium: கனடாவின் மூடப்பட்ட தீம் பார்க்கில் இருந்து கொண்டுவரப்பட்ட இரண்டாவது பெலுகா திமிங்கலம் உயிரிழந்து இருப்பது சிகாகோ அக்வாரியத்தை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
பெலுகா திமிங்கலம் உயிரிழப்பு
நிதிச் சுமை காரணமாக ஒன்ராறியோவில் உள்ள மரின்லேண்ட்(Marineland) பூங்கா நிரந்தரமாக மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
இதனால் அங்குள்ள விலங்குகள் கருணை கொலை செய்யப்படலாம் என்ற அச்சம் எழுந்த நிலையில், மரின்லேண்ட்டில் இருந்து கிட்டத்தட்ட 30 பெலுகா திமிங்கலங்கள் மற்றும் 4 டால்பின்கள் மீட்கப்பட்டன..

இந்நிலையில் சிகாகோவின் ஹெட் அக்வாரியம்(Shedd Aquarium) புதன்கிழமை வெளியிட்ட அறிவிப்பில், மூடப்பட்ட மரின்லேண்ட் பூங்காவில் இருந்து கொண்டு வரப்பட்ட 20 வயதுடைய ரெய்ன்(Rain) என்ற பெலுகா திமிங்கலம் பரிதாபமாக உயிரிழந்து இருப்பதாக தெரிவித்துள்ளது.
ஷெட் அக்வாரியமிற்கு கொண்டுவரப்பட்ட சில வாரங்களிலேயே ரெய்ன் திமிங்கலம் உயிரிழந்து இருப்பது மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த மாத இறுதியில் நயாகரா நீர்வீழ்ச்சி(மரின்லேண்ட்) பூங்காவில் இருந்து மீட்கப்பட்ட 23 வயது பீகாச்சு(Peekachu) என்ற திமிங்கலம் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

அக்வாரியத்தின் தலைவர் விளக்கம் மற்றும் விசாரணை
விலங்குகளை இழப்பது என்பது மிகவும் கடினமானது. பிகாச்சு மற்றும் ரெய்ன் இழந்தது அவற்றை பராமரித்து வந்தவர்களுக்கு ஆழ்ந்த மன வேதனையை ஏற்படுத்தி இருப்பதாக அக்வாரியத்தின் விலங்கு பராமரிப்பு துணைத் தலைவர் ஆண்ட்ரூ பல்வர் தெரிவித்துள்ளார்.
மேலும் புதிதாக வந்த திமிங்கலங்கள் புதிய சூழலுக்கு பழகுவதற்காக கண்காணிப்பாளர்கள் 24 மணி நேரமும் தீவிரமாக கண்காணித்து வந்தனர். இருப்பினும் இந்த மரணங்கள் எதிர்பாராத ஒன்று என்று பல்வர் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் இரண்டு திமிங்கலங்களும் உயிரிழந்ததற்கான காரணத்தை கண்டறிய பிரேத பரிசோதனை மற்றும் இரத்த பரிசோதனைகள் நடைபெற்று வருகிறது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |