ஈரானிய எண்ணெய் டேங்கரை தாக்கிய 4 அமெரிக்க ஏவுகணைகள்: வெளியேற்றப்பட்ட பணியாளர்கள்
ஈரானிய எண்ணெய் டேங்கர்கள் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியுள்ளது.
அமெரிக்கா தாக்குதல்
ஈரானின் கார்க்(Kharg) தீவுக்கு அருகில் நின்று கொண்டிருந்த எண்ணெய் டேங்கர் மீது நேரடியாக தாக்குதல் நடத்தப்பட்டு இருப்பதாக ஈரானின் உள்ளூர் ஊடகங்கள் தகவல் தெரிவித்துள்ளது.
ஈரானின் மாணவர் செய்தி வலையமைப்பு(SNN) இது தொடர்பான முதற்கட்ட தகவலை வெளியிட்ட நிலையில், இந்த சம்பவம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த தாக்குதலின் போது ஈரானிய டேங்கர்கள் 4 ஏவுகணைகளை அமெரிக்கா ஏவி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் கப்பலில் இருந்த பணியாளர்கள் அவசர அவசரமாக வெளியேற்றப்பட்டு வருவதாக உள்நாட்டு செய்தி நிறுவனமான Khabar Fouri தகவல் தெரிவித்துள்ளது.
கார்க் தீவு ஈரானின் எண்ணெய் ஏற்றுமதியில் 90 சதவீதத்தை கையாண்டு வருகிறது.
இந்நிலையில் கார்க் தீவுக்கு அருகே நடத்தப்பட்ட தாக்குதலின் சேத விவரங்கள் குறித்து எந்தவொரு தகவலின் இதுவரை வெளியாகவில்லை.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |