காசா அமைதி திட்டத்தின் 2வது கட்டம் நெருங்கிவிட்டது! இஸ்ரேலிய பிரதமர் நெதன்யாகு கருத்து
காசாவிற்கான போர் நிறுத்த திட்டத்தின் இரண்டாவது கட்டம் நெருங்கிவிட்டதாக இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு குறிப்பிட்டுள்ளார்.
2ம் கட்ட காசா சமாதான திட்டம்
அமெரிக்காவின் முயற்சியில் மேற்கொள்ளப்பட்ட காசா சமாதான திட்டத்தின் இரண்டாவது கட்டம் நெருங்கி விட்டதாக இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு சுட்டிக் காட்டியுள்ளார்.
அதே நேரத்தில், இஸ்ரேலுக்கும் காசா படைகளுக்கும் இடையே நிலவி வரும் முக்கிய சில பிரச்சினைகள் இன்னும் தீர்வு காணப்பட வேண்டி இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

அதில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் முன்முயற்சியில் மேற்கொள்ளப்பட்ட அமைதி ஒப்பந்தத்தின் இரண்டாவது கட்டமானது நெருங்கி இருப்பதாக நெதன்யாகு குறிப்பிட்டுள்ள நிலையில், அதன்படி காசாவில் இருந்து இஸ்ரேலிய துருப்புகள் மேலும் வெளியேறுவது கட்டாயமாகிறது.
அதே சமயம் காசாவில் இடைக்கால நிர்வாகம் உருவாக்குதல், ஹமாஸ் ஆயுதங்களை கைவிடுதல், புனரமைப்பு மற்றும் சர்வதேச பாதுகாப்பு படைகளை நிலைநிறுத்துதல் ஆகியவற்றிக்கும் இரண்டாம் கட்டம் அழைப்பு விடுகிறது.
அமெரிக்கா அழுத்தம்
அமைதி திட்டத்தின் இரண்டாவது கட்டத்திற்கு செல்லுமாறு இஸ்ரேல் தரப்பிற்கும், ஹமாஸ் தரப்பிற்கு டிரம்ப் நிர்வாகம் மற்றும் சர்வதேச மத்தியஸ்தர்கள் அழுத்தத்தை அதிகரித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அரபு ஊடகங்களின் தகவல் படி, காணாமல் போன கடைசி இஸ்ரேலிய பிணைக் கைதியானவரான கவிலி என்பவரின் உடலை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |