களைகட்டும் தமிழக தேர்தல் களம்! 171 தொகுதிகளுக்கான 2வது வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது அதிமுக! கொளத்தூரில் யார் போட்டி?
2021 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்களின் 2வது பட்டியல் அதிாகரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது.
கடந்த மார்ச் 5ம் திகதி வெளியிடப்பட்ட அதிமுக-வின் முதல் பட்டியலில் 6 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டனர்.
அதிமுக வேட்பாளர்கள் முதல் பட்டியல்: போடிநாயக்கனூர் தொகுதி - ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி தொகுதி - எடப்பாடி கே.பழனிசாமி, ராயபுரம் தொகுதி - ஜெயக்குமார், விழுப்புரம் தொகுதி - சி.வி.சண்முகம், ஸ்ரீவைகுண்டம் - எஸ்.பி.சண்முகநாதன், நிலக்கோட்டை - எஸ்.தேன்மொழி ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
இந்நிலையில் இன்று 171 தொகுதிகளுக்கான அதிமுக-வின் இரண்டாவது வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
பொன்னேரி - சிறுணியம் பலராமன், திருத்தணி - கோ.அரி, திருவள்ளூர் - பி.வி.ரமணா, ஆவடி - அமைச்சர் பாண்டியராஜன், மதுரவாயல் - அமைச்சர் பெஞ்சமின், அம்பத்தூர் - அலெக்சாண்டர், மாதவரம் - வி.மூர்த்தி, திருவொற்றியூர் - குப்பன், ஆர்.கே.நகர் - ராஜேஸ், கொளத்தூர் - ஆதிராஜாராம், வில்லிவாக்கம் - ஜே.சிடி.பிரபாகர், அண்ணாநகர் - கோகுல இந்திரா, விருகம்பாக்கம் - வி.என்.ரவி, சைதாப்பேட்டை - சைதை துரைசாமி.
தியாகராயநகர் - சத்யா, மயிலாப்பூர் - ஆர்.நட்ராஜ், வேளச்சேரி - அசோக், சோழிங்கநல்லூர் - கே.பி.கந்தன், ஆலந்தூர் - பா.வளர்மதி, ஸ்ரீபெரும்பதூர் - கே.பழனி, பல்லாவரம் - சிட்லபாக்கம் ராஜேந்திரன் போட்டியிடுகின்றனர்.
— Sangeetha Kandavel (@sang1983) March 10, 2021
— Sangeetha Kandavel (@sang1983) March 10, 2021
— Sangeetha Kandavel (@sang1983) March 10, 2021