இந்தியா-நியூசிலாந்து மோதிய 2வது ஒருநாள் போட்டி ரத்து: மழை விடாது பெய்ததால் ரசிகர்கள் வருத்தம்
நியூசிலாந்து-இந்தியா இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி மழை குறுக்கீடு காரணமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.
டாஸ் வென்ற நியூசிலாந்து
நியூசிலாந்து-இந்தியா இடையிலான முதல் ஒருநாள் போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்து வெற்றி பெற்று இருந்த நிலையில், இரண்டாவது ஒருநாள் போட்டி செடான் பார்க், ஹாமில்டன் மைதானத்தில் இன்று தொடங்கியது.
இந்த போட்டிக்கான நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற நியூசிலாந்து அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.
முதல் பேட்டிங்
நியூசிலாந்து அணி பந்து வீச்சை தேர்வு செய்ததை அடுத்து முதலில் துடுப்பாட்டத்தில் களமிறங்கிய இந்திய அணியில் தொடக்க வீரர் மற்றும் கேப்டனான ஷிகர் தவான் 3 ஓட்டங்கள் குவித்து இருந்த போது மாட் ஹென்றி பந்து வீச்சில் அவுட்டாகி வெளியேறினார்.
இதையடுத்து களத்தில் ஒன்று சேர்ந்த சுப்மன் கில் மற்றும் சூர்ய குமார் யாதவ் ஜோடி சீரான வேகத்தில் ஓட்டங்கள் குவிக்க தொடங்கினர்.
ஆனால் இந்திய அணி 12.5 ஓவர்கள் முடிவில் ஒரு விக்கெட்டை இழந்து 89 ஓட்டங்கள் குவித்த இருந்த போது ஆட்டத்தில் மழை குறுக்கிட்டதால் வீரர்கள் பெவிலியனுக்கு திரும்பினர்.
#INDvsNZ: Rain washes out India vs New Zealand 2nd ODI at Seddon Park
— TOI Sports (@toisports) November 27, 2022
REPORT: https://t.co/rHln3TvyWs ?️☂️?#INDvNZ pic.twitter.com/MIO6bcLr32
ஆட்டம் கைவிடப்பட்டது
சிறிது நேரத்தில் ஓவர்கள் குறைக்கப்பட்டு மீண்டும் போட்டி தொடங்கப்படும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில், மழை விடாமல் பெய்து போட்டியை இடையூறு செய்ததால் ரசிகர்கள் கவலை அடைந்தனர்.
இறுதியில் நியூசிலாந்து-இந்தியா இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி மழை குறுக்கீடு காரணமாக ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.