கண்ணி வெடியில் சிக்கிய 2வது கச்சா எண்ணெய் கப்பல்: நடுக்கடலில் செயலிழந்த சூப்பர் டேங்கர்
2nd oil tanker struck by sea mine in Hormuz: ஹார்முஸ் நீரிணைப் பகுதியில் கண்ணிவெடிகள் வெடித்ததில் கச்சா எண்ணெய் கப்பல் செயலிழந்துள்ளது.
கண்ணி வெடியில் சிக்கிய கச்சா எண்ணெய் கப்பல்
ஹார்முஸ் ஜலசந்தி பகுதியில் அனுமதிக்கப்படாத பாதை வழியாக சென்ற கச்சா எண்ணெய் கப்பல் கண்ணி வெடியில் சிக்கி அழிந்துள்ளது.
சுமார் 20 லட்சத்திற்கும் அதிகமான பீப்பாய்கள் கச்சா எண்ணெய் உடன் சென்ற 2வது சரக்கு கப்பல் கண்ணி வெடிகளில் மோதி கடலிலேயே செயலிழந்ததாக ஈரானிய புரட்சிகர கடற்படையினரை குறிப்பிட்டு தஸ்னிம் செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது.

ராணுவத்தினர் வழங்கிய தகவல் படி, சம்பந்தப்பட்ட கப்பல் தன்னுடைய அனைத்து ரேடார் பொசிஷனிங் மற்றும் கண்காணிப்பு அமைப்புகளை அணைத்து விட்டு, அமெரிக்காவின் மறைமுக உதவியுடன் அனுமதிக்கப்படாத பாதையில் சட்டவிரோதமாக பயணிக்க முயன்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கண்ணி வெடிகளில் மோதி ஏற்பட்ட பயங்கர வெடிப்பில் கப்பலின் எஞ்சின் அறையில் தீ பிடித்தது. மேலும் கப்பல் முழுவதும் தீ பரவியதால் கப்பல் முற்றிலுமாக நகர முடியாமல் செயலிழந்தது.
ஒரே நாளில் ஹார்முஸ் ஜலசந்தி பகுதியில் கண்ணி வெடியில் சிக்கி செயலிழக்கும் இரண்டாவது சூப்பர் டேங்கர் விபத்து இதுவாகும்.