பிரான்ஸ் ஜனாதிபதி தேர்தல்: இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு தொடக்கம்!
செய்தி சுருக்கம்:
- இரண்டாம் கட்ட பிரான்ஸ் ஜனாதிபதி வி்றுவிறுப்பாக இன்று தொடங்கியுள்ளது.
- இம்மானுவேல் மக்ரோன் மற்றும் மரைன் லு பென் கடுமையான போட்டி நிலவும் என கருத்துகணிப்புகள் தெரிவிப்பு
-
இடதுசாரி கொள்கை தலைவர் மெலன்சோனின் மக்ரோனுக்கு மறைமுக ஆதரவு
பிரான்ஸ் தற்போதைய பிரதமர் இம்மானுவேல் மக்ரோன் மற்றும் மரைன் லு பென் இடையிலான ஜனாதிபதி தேர்தலின் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு இன்று(24/04/2022) நடைப்பெற தொடங்கியுள்ளது.
பிரான்ஸ் நாட்டில் ஜனாதிபதி தேர்தலின் முதல்கட்ட வாக்குபதிவு (10/02/22) திகதியன்று நடைபெற்று முடிந்தது, இதில் இம்மானுவேல் மக்ரோன்(Macron) 27.6 சதவிகித வாக்குகளுடன் முதலிடத்தையும் லு பென்(Le Pen) 23.4 சதவிகித வாக்குகளுடன் இரண்டாம் இடத்தையும் பெற்றனர்.
இந்த நிலையில், இம்மானுவேல் மக்ரோன் மற்றும் மரைன் லு பென் இடையிலான இரண்டாம் கட்ட வாக்குபதிவு வி்றுவிறுப்பாக இன்று(24/04/2022) தொடங்கியுள்ளது.
இதுவரை வெளிவந்துள்ள கருத்து கணிப்புகளில் இம்மானுவேல் மக்ரோன் வெற்றி பெற்று இரண்டாவது முறையாக ஆட்சியை கைப்பற்றுவார் என தெரிவித்துள்ளது. ஆனால் மக்ரோன் மற்றும் லு பென் இடையிலான வாக்கெடுப்பு மிகவும் நெருக்கமாக நடைப்பெறும் எனவும் தெரிவித்துள்ளது.
மக்ரோன் மற்றும் லு பென் இடையிலான இந்த தேர்தல் பிரான்ஸில் இதுவரை நடைப்பெற்ற ஜனாதிபதி தேர்தலில் இல்லாத அளவிற்கு மிகவும் நெருக்கமாக நடைப்பெறும் தேர்தல் இதுவாகும்.
கூடுதல் செய்திகளுக்கு: உக்ரைனில் பிரித்தானிய சிறப்பு படை குறித்து விசாரணை: ரஷ்யா அறிவிப்பு!
மைய கொள்கை கொண்ட மக்ரோனும் தீவிர வலதுசாரி கொள்கை கொண்ட லு பெனும் மோதும் இந்த இரண்டாம் கட்ட வாக்குபதிவில் இடதுசாரி கொள்கை கொண்ட ஜீன்-லூக் மெலன்சோனின் (Jean-Luc Mélenchon) மறைமுக ஆதரவு இருபதால் இம்மானுவேல் மக்ரோன் வெற்றி பெற்று இரண்டாவது முறையாக ஆட்சி அமைப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த செய்திக்கான வளம்: .foreign brief