ஜேர்மனியில் இளம்பெண்கள் தாக்கப்பட்ட விவகாரம்: அமெரிக்கரை தாக்கிய இரண்டாவது நபர் சரண்
ஜேர்மனியில், ஓடும் ரயிலில் ஜேர்மன் நாட்டவர்களான இளம்பெண்கள் இருவரை தொந்தரவு செய்த நபர்களைத் தட்டிக் கேட்ட அமெரிக்கருக்கு கத்திக் குத்து விழுந்த வழக்கில், இரண்டாவது நபர் பொலிசில் சரணடைந்துள்ளார்.
இளம்பெண்கள் தாக்கப்பட்ட விவகாரம்
ஜேர்மனியின் Dresden நகரில், ஓடும் ரயிலில் இளம்பெண்கள் இருவரை தொந்தரவு செய்துள்ளார்கள் சிலர். அந்தப் பெண்களை முரட்டுத்தனமாக தாக்கவும் செய்துள்ளார்கள் அவர்கள்.
அப்போது அதே ரயிலில் பயணித்துக்கொண்டிருந்த அமெரிக்கரான ஜான் ருடாட் (John Rudat, 21) என்பவர் அந்தப் பெண்ணுக்கு தொந்தரவு கொடுத்தவர்களை தட்டிக் கேட்டுள்ளார்.
உடனே அவர்களில் ஒருவர் ஜானை கத்தியால் சரமாரியாகத் தாக்கியுள்ளார். ஜானுடைய முகத்தில் பல வெட்டுக்காயங்கள் ஏற்பட்டன.
கத்தியால் தாக்கியவரும் அவருடன் இருந்த ஒருவரும் தப்பியோடிய நிலையில், அவர்களில் ஒருவரான 21 வயதுடைய சிரியா நாட்டவரான ஒருவரை பொலிசார் கைது செய்தார்கள்.
இரண்டாவது நபர் சரண்
இந்நிலையில், ஜானைத் தாக்கியவர்களில் இரண்டாவது நபர் பொலிசில் சரணடைந்துள்ளார்.
அவரும் ஒரு புலம்பெயர்ந்தோர்தான். 20 வயதான அந்த சிரியா நாட்டவர் அவரைப் பிடிப்பதற்கான நடவடிக்கைகளில் இறங்கிய பொலிசார், wanted notice விடுத்திருந்தார்கள்.
இந்நிலையில், புறநகர்ப்பகுதி ஒன்றிலிருந்து பொலிசாரை அழைத்த அந்த நபர், தான் இருக்கும் இடம் குறித்து பொலிசாருக்குத் தெரிவிக்க, பொலிசார் அங்கு சென்று அவரைக் கைது செய்துள்ளார்கள்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |