அமெரிக்க தூதரகம் மீது தாக்குதல்: பெண்கள் உட்பட சுவிஸ் நாட்டவர்கள் மூன்று பேர் கைது
சுவிட்சர்லாந்திலுள்ள அமெரிக்க தூதரகம் ஒன்றின் மீது தாக்குதல் நடத்திய விடயம் தொடர்பாக மூன்று பேரை சுவிஸ் பொலிசார் கைது செய்துள்ளார்கள்.
அமெரிக்க தூதரகம் மீது தாக்குதல்
சுவிட்சர்லாந்தின் சூரிக் நகரில் அமைந்துள்ள அமெரிக்கத் தூதரகம் முன் பலர் கூடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக பொலிசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.

தூதரகத்தின் ஜன்னல் கண்ணாடிகள் அடித்து நொறுக்கப்பட்டதுடன், சுவர்களில் ஸ்பிரே பெயிண்ட் மூலம் கிறுக்கவும் செய்துள்ளார்கள் சிலர்.
அங்கு விரைந்த பொலிசார், இந்த விடயத்தில் தொடர்புடையவர்கள் என கருதப்படும் 20 வயது இளம்பெண்கள் இருவர் மற்றும் 18 வயது இளைஞர் ஒருவர் ஆகியோரை கைது செய்துள்ளார்கள்.
அவர்கள் ஏற்படுத்திய சேதத்தின் மதிப்பு பல ஆயிரம் சுவிஸ் ஃப்ராங்குகள் என கணக்கிடப்பட்டுள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |