அதிகரித்து செல்லும் ஆன்லைன் நிதி மோசடி - இலங்கையில் கைது செய்யப்பட்டுள்ள சீன பிரஜைகள்!
ஆன்லைன் நிதி மோசடிகளில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் சீன பிரஜைகள் மூவர் காலி, ஜிந்தோட்டையில் கைது செய்யப்பட்டுள்ளதாக இலங்கை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்படும் போது சந்தேகநபர்களிடம் இருந்து ஐந்து கையடக்கத் தொலைபேசிகள், நான்கு கடன் அட்டைகள் மற்றும் உரிமையாளர் இல்லாத கடவுச்சீட்டு என்பனவும் கைப்பற்றப்பட்டுள்ளன.
ஹோட்டல் ஒன்றில் தங்கியிருந்து இணையத்தில் மோசடியில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் மூன்று சீன பிரஜைகள் தொடர்பில் காலி பொலிஸாருக்கு கிடைத்த தகவலையடுத்து இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதன்படி, காலி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஜிந்தோட்டை பிரதேசத்தில் போப் வீதியிலுள்ள ஹோட்டல் ஒன்றில் வைத்து 33 மற்றும் 38 வயதுடைய சீன பிரஜைகள் மூவர் நேற்று (24) கைது செய்யப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் காலி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |