பிரித்தானியாவில் 3 நிலநடுக்கங்கள் பதிவு: தூக்கத்திலிருந்து அலறியடித்து எழுந்த மக்கள்
பிரித்தானியாவின் ஸ்காட்லாந்து பகுதியில் இன்று மூன்று நிலநடுக்கங்கள் பதிவாகியுள்ளன.
ஆர்கைல் மற்றும் பியூட் (Argyll and Bute) பகுதியில், ஓபன் (Oban) நகரில் தூங்கிக்கொண்டிருந்த மக்கள் திடீர் நில அதிர்வால் பயத்தில் அலறியடித்து எழுந்துள்ளனர்.
நிலநடுக்கங்களின் விவரங்கள்
முதல் நிலநடுக்கம் உள்ளூர் நேரப்படி முற்பகல் 3.03 மணிக்கு, 2.2 ரிக்டர் அளவிலான அதிர்வுகள் பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கம் ஓபனில் இருந்து 5 கிமீ கிழக்கே மையம் கொண்டிருந்தது.
இரண்டாவது நிலநடுக்கம் காலை 8.09 மணிக்கு 1.6 ரிக்டர் அளவிலான அதிர்வுகள் பதிவாகியுள்ளது.
அதனைத் தொடர்ந்து, சில நிமிடங்களில் மூன்றாவது நிலநடுக்கம் காலை 8.27 மணிக்கு 0.5 ரிக்டர் அளவில் பதிவானது.
நிலநடுக்கம் குறித்து அப்பகுதி மக்கள் சமூக வலைதளங்களில் தங்கள் அனுபவங்களை பகிர்ந்தனர்.
நில அதிர்வு கேர்ரேரா (Kerrera) தீவிலும், மல் (Mull) தீவிலும் உணரப்பட்டதாக்க மக்கள் தெரிவித்துள்ளனர்.
நிலநடுக்கத்தின் தாக்கம்:
வீடுகள் சில வினாடிகள் அதிர்ந்துள்ளன. பாதிப்பு எவ்வளவு தீவிரம் என்பதை உறுதிப்படுத்த அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.
இது போன்ற சிறிய நிலநடுக்கங்கள், பெரும் தாக்கத்துடன் இருக்கும் என பயமுறுத்தவில்லை என்றாலும், எதிர்காலத்தில் இதை மையமாகக் கொண்ட வலுவான நிலநடுக்கங்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளதா என்பது குறித்து விஞ்ஞானிகள் கண்காணித்து வருகின்றனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
UK earthquake, Three earthquakes recorded in UK, earthquake scotland UK