பெருவில் 3000க்கும் அதிகமான ராட்சத சிலந்தி கடத்தல்: 3 ஐரோப்பிய நாட்டவர்கள் கைது
3 Europeans arrested in Peru for smuggling tarantula: பெரு நாட்டில் 3000க்கும் அதிகமான ராட்சத சிலந்திகளை கடத்தும் முயற்சி வெற்றிகரமாக முறியடிக்கப்பட்டுள்ளது.
3000க்கும் அதிகமான ராட்சத சிலந்திகள் கடத்தல்
பெரு நாட்டின் லிமா நகரில் அமைந்துள்ள ஜார்ஜ் சாவேஸ் சர்வதேச விமான நிலையத்தில் 3000க்கும் மேற்பட்ட டாரண்டுலா(Tarantula) ரக ராட்சத சிலந்திகள் ஜேர்மனிக்கு கடத்தப்பட இருந்த நிலையில் அது வெற்றிகரமாக முறியடிக்கப்பட்டுள்ளது.
இந்த கடத்தல் சம்பவத்தில் தொடர்புடைய ஐரோப்பிய நாடுகளை சேர்ந்த 3 பேரை விமான நிலைய அதிகாரிகள் அதிரடியாக கைது செய்துள்ளனர்.

அதிகாரிகளுக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் நவம்பர் 3ம் திகதி விமான நிலையத்தில் தீவிர பரிசோதனையில் ஈடுபட்ட விமான நிலைய அதிகாரிகள் 2 ஜேர்மன் நாட்டைச் சேர்ந்தவர் மற்றும் 1 போலந்து நாட்டை சேர்ந்தவரை மடக்கி பிடித்து கைது செய்தனர்.
சிலந்திகளின் கடத்தலை மறைப்பதற்காக பிளாஸ்டிக் டப்பாக்கள் உறைக்குள் சுற்றி வைக்கப்பட்டிருந்தது.
இந்த பெட்டிகளுக்குள் குட்டி சிலந்திகள் முதல் பல அங்குலம் வளர்ந்த ராட்சத சிலந்திகள் வரை ஆயிரக்கணக்கான உயிருள்ள சிலந்திகள் அடைத்து வைக்கப்பட்டிருந்தன.
இந்த சம்பவத்தில் கைது செய்யப்பட்ட மூன்று பேரும் சுற்றுச்சூழல் தொடர்புடைய குற்றங்களில் ஈடுபட்டதற்கான பின்னணியை கொண்டவர்கள் என பெரு தேசிய காவல்துறை உறுதிப்படுத்தியுள்ளது.
No era solo ropa en una 🧳: ¡eran 3000 tarántulas 🕷️ vivas! Oficiales de Acciones Inmediatas con información de Inteligencia Aduanera intervinieron a un pasajero que volaba a Cracovia 🇵🇱 con estas especies protegidas ocultas en sus prendas de vestir y en su equipaje de bodega. https://t.co/xEz6Uk90W9
— SUNAT (@SUNATOficial) November 5, 2026
இந்நிலையில், இது தொடர்பான குற்றவியல் விசாரணையை சுற்றுச்சூழல் வழக்கறிஞர் அலுவலகம் தொடங்கியுள்ளது.
குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டால் கைது செய்யப்பட்ட நபர்களுக்கு 3 முதல் 5 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை கிடைக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.