பிரித்தானியாவில் இருந்து திரும்பிய 3 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி! நேற்று மட்டும் 1009 பாதிப்பு என அறிவிப்பு
பிரித்தானியாவில் புதிய வகை கொரோனா வைரஸ் பரவி வரும் நிலையில், அங்கிருந்து திரும்பிய 3 பேர் உட்பட மொத்தம் தமிழகத்தில் நேற்று மட்டும் 1009 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
புதிய வகை கொரோனா வைரஸ் பிரித்தானியாவின் தலைநகர் லண்டன் மற்றும் இங்கிலாந்தின் தென் கிழக்கு பகுதிகளில் தீவிரமாக பரவி வருகிறது.
இதன் காரணமாக அங்கு உரடங்கு விதிக்கப்பட்டிருக்கிறது. இந்த புதிய வகை கொரோனா வைரஸ் காரணமாக பிரித்தானியாவில் இருந்து சொந்த நாடுகளுக்கு திரும்பும் மக்களை அந்தந்த நாட்டு அரசு தீவிர பரிசோதனைக்கு பின்னரே தங்கள் நாட்டிற்கு அனுமதிக்கப்படுகின்றனர்.
அந்த வகையில், பிரித்தானியாவில் இருந்து இந்தியாவின் தமிழகத்திற்கு திரும்பிய 1,009 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், மாநிலத்தில் உள்ள, 235 கொரோனா பரிசோதனை ஆய்வகங்களில், நேற்று மட்டும், 64 ஆயிரத்து, 283 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டன.
அதில், சென்னையில், 290, கோவையில், 94 பேர் உட்பட, மாநிலம் முழுதும், 1,009 பேருக்கு தொற்று உறுதியானது. நேற்று மூன்று பேர் உட்பட, பிரிட்டனில் இருந்து நாடு திரும்பியவர்களில், 13 பேர், இதுவரை தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அவர்களுடன் தொடர்பில் இருந்த, 93 பேரில், 12 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். மார்ச் முதல் நேற்று வரை, 1.39 கோடி மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டதில், எட்டு லட்சத்து, 14 ஆயிரத்து, 170 பேருக்கு பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.
சிகிச்சை பெற்றவர்களில் நேற்று, 1,091 பேர் குணமடைந்தனர். இவர்களுடன் சேர்த்து, இதுவரை, ஏழு லட்சத்து, 93 ஆயிரத்து, 154 பேர் சிகிச்சை முடிந்து, இயல்பு வாழ்க்கைக்கு திரும்பியுள்ளனர்.
தற்போது சென்னையில், 2,854, கோவையில், 857, செங்கல்பட்டில், 617 என, 8,947 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா தொற்றால், நேற்று சென்னையில் ஐந்து பேர் உட்பட, 10 பேர் இறந்துள்ளனர். இவர்களுடன் சேர்த்து இதுவரை, 12 ஆயிரத்து, 69 பேர் இறந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது/