கத்தார் எரிபொருள் ஆலை விபத்து - தமிழ்நாட்டை சேர்ந்த 3 பேர் உயிரிழப்பு
கத்தார் எரிபொருள் ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்த்தில் தமிழ்நாட்டை சேர்ந்த 3 பேர் உயிரிழந்துள்ளனர்.
கத்தார் எரிபொருள் ஆலை விபத்து
ஈரான் போரின் போது நடந்த தாக்குதலில் கத்தாரின் ராஸ் லப்பான் பகுதியில் உள்ள முக்கிய இயற்கை எரிவாயு ஆலையில் ஏற்றுமதி முனையம் பாதிக்கப்பட்டு, அதன் செயல்பாடுகள் நிறுத்தப்பட்டது.

தற்போது போர் பதற்றம் தணிந்துள்ள நிலையில், ஆலையை மீண்டும் துவங்குவதற்கான சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், கடந்த ஜூன் 21 ஆம் திகதி ஆலையில் பாரிய வெடி விபத்து ஏற்பட்டுள்ளது.
இதில், 13 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 66 பேர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் கத்தார் எரிசக்தி அமைச்சர் உறுதிப்படுத்தியுள்ளார்.
தமிழ்நாட்டை சேர்ந்த 3 பேர் உயிரிழப்பு
உயிரிழந்ததில் 12 பேர் இந்தியர்கள் ஆவார்கள். அதில், 3 பேர் தமிழ்நாட்டின் திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்தவர்கள்.
திருநெல்வேலியின் ராதாபுரத்தைச் சேர்ந்த பவித் (26), பணகுடியைச் சேர்ந்த சுஜித்குமார், கவின் ஆகியோர் உயிரிழந்துள்ளனர்.
Deeply saddened by the loss of lives and injuries, including of Indian nationals, in the explosion at Qatar’s Ras Laffan Industrial City.
— Dr. S. Jaishankar (@DrSJaishankar) June 22, 2026
As further details emerge, our Embassy continues to be in touch with Qatari authorities, and is reaching out to render assistance to the… https://t.co/tHifrYGvPT
விபத்தில் உயிரிழந்த இந்தியர்களுக்கு இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் இரங்கல் தெரிவித்துள்ளார்.
உயிரிழந்த 3 பேரின் குடும்பத்திற்கும் தலா ரூ.10 லட்சம் நிவாரண நிதியாக வழங்கிட உத்தரவிட்டுள்ளதாகவும் . அவர்களின் உடல்களை தமிழ்நாட்டிற்குக் கொண்டுவர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |