கழிவறையை பயன்படுத்தியதற்காக மாணவர்களின் கைகளில் சூடான எண்ணெயை ஊற்றிய ஆசிரியர்கள்
ஆசிரியர்களின் கழிவறையை பயன்படுத்தியதற்காக, மாணவர்களின் கைகளில் சூடான எண்ணெயை ஊற்றி ஆசிரியர்கள் கொடூரமாக தாக்கியுள்ளனர்.
இந்தியாவின் சத்தீஸ்கர் மாநிலத்தில் Bastar பகுதியில் உள்ள கோண்டகான் மாவட்டத்தில் உள்ள Kerwahi மேல்நிலைப் பாடசாலையில் இந்த சம்பவம் நடந்துள்ளது.
ஆசிரியர்களின் செயலால் சுமார் 25 மாணவர்கள் தீக்காயம் அடைந்தனர். இந்த சம்பவத்தில் தலைமையாசிரியை மற்றும் 2 ஆசிரியர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
பாடசாலை அதிகாரிகள் முன்னிலையில் நடந்த இச்சம்பவம், பெற்றோர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியதுடன், கல்வித்துறையின் தலையீட்டை தூண்டியது. இந்த சம்பவத்தின் வீடியோ வெளியானதையடுத்து, மூன்று ஆசிரியர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டனர்.
வெள்ளிக்கிழமை மதிய உணவு நேரத்தில், ஆசிரியர்கள் மதிய உணவிற்குச் சென்றனர், அவர்கள் திரும்பி வந்தபோது யாரோ தங்கள் கழிப்பறை வசதியைப் பயன்படுத்தியதைக் கண்டனர். மாணவர்களை விசாரித்து, தண்டனையாக கைகளில் சூடான எண்ணெயை ஊற்றும்படி உத்தரவிட்டனர். ஆசிரியர்கள் குழந்தைகளை கட்டாயப்படுத்தி சூடான எண்ணெயை கைகளில் ஊற்றியதாக பெற்றோர்கள் கூறினர்.
இந்த வீடியோ வைரலானதையடுத்து, கல்வித்துறை உடனடியாக நடவடிக்கை எடுத்தது. இச்சம்பவம் குறித்து விரிவாக விசாரிக்க மாவட்ட கல்வித் துறை விசாரணைக் குழுவை அமைத்தது.
இக்குழுவினர் மாவட்ட கல்வி அலுவலரிடம் அறிக்கை சமர்ப்பித்த பிறகு, அதன் அடிப்படையில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |