உயிரியல் பூங்காவில் புலி கூண்டில் பாதி தின்ற மனிதனின் உடல்.. நடந்தது என்ன..?
பாகிஸ்தானில் உள்ள பூங்காவில் அதிர்ச்சிகரமான சம்பவம் ஒன்று வெளியாகியுள்ளது.
பாகிஸ்தானின் கிழக்கு மாகாணமான பஞ்சாபில் அமைந்துள்ள Bahawalpur-ல் உள்ள Sherbagh உயிரியல் பூங்காவில் இந்த சம்பவம் நடந்துள்ளது.
உயிரியல் பூங்கா ஊழியர்கள் புலி கூண்டில் பாதி தின்ற நிலையில் ஆணின் உடலை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இந்த நபர் புலியின் கூண்டுக்குள் குதித்திருக்கலாம் என நம்பப்படுகிறது.
இதையடுத்து, மீதி சடலம் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
புலி கூண்டில் உள்ள சிசிடிவி காட்சிகள் மற்றும் ஆதாரங்களின்படி, புலிகள் அவரைத் தாக்கும் போது அவர் உயிருடன் இருந்ததாக நம்பப்படுகிறது.
இந்த சம்பவத்தையடுத்து பஞ்சாபின் கிழக்கு மாகாணத்தில் அமைந்துள்ள உயிரியல் பூங்கா மூடப்பட்டது. மேலும், அந்த நபர் எப்படி புலி கூண்டுக்குள் நுழைந்தார் என்பது குறித்தும் விசாரணை நடந்து வருகிறது.
ஆனால், புலி மனிதனை தாக்குவதற்காக கூண்டிலிருந்து வெளியே வரவில்லை, அதற்கு பதிலாக அந்த நபர் புலியின் கூண்டிற்குள் நுழைந்துள்ளார் என்பது முதன்மையாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இதையடுத்து, உயிரியல் பூங்காவில் பாதுகாப்பு குறைபாடு இருந்தால், அதுவும் சரி செய்யப்படும் என்றும், தேவைப்பட்டால் தனிப் பாதுகாவலர்களும் நியமிக்கப்படுவார்கள் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சடலம் அடையாளம் காண முடியாத நிலையில் இருந்ததுள்ளது. மேலும், இறந்த உடலை அடையாளம் காண யாரும் முன்வரவில்லை என்றும் அதிகாரி ஒருவர் கூறினார்.
புலி கூண்டில் குதித்தவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்று உயிரியல் பூங்கா ஊழியர்கள் கூறுகின்றனர். இந்நிலையில், இந்த விவகாரம் தற்போது விசாரணையில் உள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |
Sherbagh Zoo Pakistan, Bahawalpur, Pakistan News, Man inside Tiger Den