ஒரே மாதத்தில் உடல் எடையை சட்டுன்னு குறைக்க உதவும் 3 பானங்கள்
உடல் எடை அதிகரிப்பு என்பது தற்போது பெரும்பாலோருக்கு இருக்கும் ஒரு பொதுவான பிரச்சனையாகும்.
உடல் எடை அதிகரிக்க தேவையில்லாத நேரத்தில் அதிகளவு உணவு உண்பது, மன அழுத்தம், அதிகளவு மருந்து மாத்திரைகள் உண்பது போன்ற பல காரணங்கள் உள்ளது.
அந்தவகையில், சட்டுன்னு உடல் எடையை குறைக்க உதவும் 3 பானங்கள் குறித்து விரிவாக பார்க்கலாம்.
1. தர்பூசணி ஜூஸ்
உடல் எடையை குறைக்க தர்பூசணி சாறு தொடர்ந்து குடித்து வரலாம். இதில் அதிக நீர்ச்சத்து உள்ளதால் ஒரு சிறந்த நீரேற்றம் கொண்டபழமாக இருக்கிறது.
இதில் வைட்டமின் ஏ மற்றும் சி நிறைந்துள்ளதால் உடலில் ஏற்படும் வீக்கத்தைக் குறைக்கும் ஆன்டி-ஆக்ஸிடன்ட் உள்ளது.
2. வெள்ளரி- இஞ்சி ஜூஸ்
வெள்ளரி மற்றும் இஞ்சி சாறு உடல் எடையை குறைக்க உதவுகிறது. வெள்ளரியில் அதிக நீர்ச்சத்து உள்ளதால் எடை இழப்புக்கு சிறந்தது.
அதே நேரத்தில் அதிக அளவு நார்ச்சத்தும் உள்ள காரணத்தால் இது மனநிறைவைத் தருகிறது.
இஞ்சியில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளதால் வீக்கத்தைக் குறைக்கவும், இரத்த ஓட்டத்தை மேம்படுத்தவும் உதவும்.
3. விளாம்பழ ஜூஸ்
விளாம்பழ ஜூஸ் எடை இழப்புக்கு ஒரு சிறந்த வழி. விளாம்பழ நாள் முழுவதும் உங்களை நீரேற்றமாக வைத்திருக்க உதவுகிறது.
இதில் நார்ச்சத்து உள்ளதால் செரிமானத்திற்கும் உதவுகிறது. சரியான செரிமானம் வளர்சிதை மாற்றத்தை சரியாக வைத்து கொழுப்பை எரிக்க உதவுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |